டென்னிஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் 11 ஆண்டுகளில் முதல் முறையாக செர்பிய வீரரிடம் தோல்வியடைந்தார். 6-4 7-6 (6) என்ற செட் கணக்கில் டுசான் லாஜோவிச்சிடம் ஜோகோவிச் தோற்றுப்போனார்



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு இன்னும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில், நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.


உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் மாட்ரிட் மாஸ்டர்ஸ் போட்டியில் இருந்து வெளியேறினார். 6-4 7-6 (6) என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகின் முதல் நிலை வீரரை வீழ்த்திய டுசான் லாஜோவிச், இது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி" என்று கூறினார்.


மேலும் படிக்க | மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் லோரென்சோ முசெட்டியிடம் படுதோல்வியடைந்த ஜோகோவிச்


"எனக்குக் கலவையான உணர்ச்சிகள் ஏற்பட்டுள்ளது, ஏனென்றால் நான் இங்கே சொந்த ஊர்க்காரருக்கு எதிராக விளையாடுகிறேன், எனக்கு நல்ல நண்பரான அவர் எங்கள் நாட்டின் ஹீரோ. அவரை வெல்வது நான் செய்யாத ஒன்று. இது சாத்தியம் என்று கூட நினைக்கவில்லை, ஆனால் அது நடந்துவிட்டது" என்று உணர்ச்சிப் பொங்க டுசான் லாஜோவிச் தெரிவித்தார்.


அல்கராஸ் மற்றும் சிட்சிபாஸ் பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறினர்
நடப்புச் சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ், 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சக ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாடிஸ்டா அகுட்டை தோற்கடித்து, பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் பார்சிலோனாவில் டெனிஸ் ஷபோவலோவை 6-3, 6-2 என்ற கணக்கில் தோற்கடித்து கடைசி எட்டுக்கு எட்டினார்.


மேலும் படிக்க | விருதுநகரில் இருந்து எவரெஸ்ட் சிகரம் வரை! சாதனை மங்கை முத்தமிழ் செல்வி


அதே நேரத்தில் காஸ்பர் ரூட் 15-ம் நிலை வீரரான பிரான்சிஸ்கோ செர்ண்டோலோவிடம் 7-6 (5), 6-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அல்கராஸ் முதல் செட்டில் ஒரு முறையும், இரண்டாவது செட்டில் இரண்டு முறையும் தோற்றார்,


2016-18 முதல் நடால் தொடர்ந்து மூன்று பட்டங்களை வென்ற பிறகு பார்சிலோனாவில் மீண்டும் மீண்டும் சாம்பியன் ஆவதற்கு முயற்சிக்கும் 19 வயதான அல்கராஸுக்கு இது தொடர்ச்சியாக இரண்டாவது நேர் செட் வெற்றியாகும்.


மற்றொரு ஸ்பெயின் வீரரும், 10-ம் நிலை வீரருமான அலெஜான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினா, எமில் ருசுவூரியை 6-4, 7-5 என்ற கணக்கில் தோற்கடித்தார்.


மேலும் படிக்க | சூடானில் இருந்து இந்தியர்கள் உட்பட 11 நாட்டு மக்களை வெளியேற்றியது சவூதி அரேபியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ