ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி நேற்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் தோற்றது. இது வரை 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் கனடா அணி அயர்லாந்திடம் தோற்றது. ஜெர்மனி- அர்ஜென்டினா ஆட்டம் (4-4) டிரா ஆனது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆட்டங்கள் முடிவு காரணமாக இந்திய அணி கால் இறுதிக்கு முன்னேறியது. கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவுடன் மோதுகிறது. இதில் தோற்றாலும் பாதிப்பு ஏற்படாது. இன்று வெற்றி பெற்றால் பி பிரிவில் 3-வது இடத்தை பிடிக்கும். 4-வது அணியாக அர்ஜென் டினா - அயர் லாந்து ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கால் இறுதிக்கு முன்னேறும்.


ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி “பீ” பிரிவில் இடம் பெற்று உள்ளது. தொடக்க ஆட்டத்தில் ஜப்பான் அணியும் 2-2 என்ற கோல்க ணக்கில் டிரா செய்தது.2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திலும் 0-3 என்ற கணக்கிலும் 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 1-6 என்ற கோல் கணக்கிலும் தோல்வி அடைந்தது.இந்திய அணி 4-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதியது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்தது. ஆட்டம் முடிவில் அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.


இந்திய அணி இதுவரை 4 போட்டியில் 3 தோல்வி, ஒரு டிராவுடன் ஒரு புள்ளியுடன் உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினாவுடன் நாளை மோதுகிறது. கால் இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் நாளைய மிகப்பெரிய கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.