கிரிக்கெட்டில் வரலாற்றில் இன்றைய தினம் (ஆகஸ்ட் 14) முக்கியமான நாள் ஆகும். இன்றைய நாளில் தான் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடைபெற்றது. கிரிக்கெட் உலகின் கடவுள்கள் என அழைக்கப்படும் "டான் பிராட்மேன்" மற்றும் "சச்சின் டெண்டுல்கர்" என்ற இரண்டு மகத்தான வீரர்களின் வாழ்வில் ஏற்ப்பட்ட சிறப்பான சம்பவங்கள் ஆகும். இதே நாளில் "சச்சின் டெண்டுல்கர்" தனது முதல் சதத்தை அடுத்தார். அதேபோல "டான் பிராட்மேன்" தனது கடைசி கிரிக்கெட்டை விளையாடினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நாளில் தான் கிரிக்கெட் உலகின் புகழ்பெற்ற வீரர் பிராட்மேன் தனது கடைசி டெஸ்ட் போட்டி விளையாடினார். அந்த போட்டோயில் அவர் பூஜ்யத்தில் அவுட் ஆனார். கிரிக்கெட் வரலாற்றில் இந்த "பூஜ்யம்" மிகவும் பிரபலமான பூஜ்யமாகும்.


ஆகஸ்ட் 14, 1948 அன்று ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் அவரது கடைசி டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸ் விளையாடினார். லண்டனில் நடந்த இந்த போட்டியில், அப்போதைய இங்கிலாந்து கேப்டன் நார்மன் யார்ட்லி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். 50 ரன்களை மட்டுமே எடுத்து இங்கிலாந்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் ஆஸ்திரேலியா தனது பேட்டிங்கை தொடங்கியது. அப்பொழுது ஆடிய டான் பிராட்மேன் இரண்டு பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்த போட்டியில் ஒரே ஒரு ரன் எடுத்திருந்தால், அவரது சராசரி டெஸ்ட் போட்டிகளில் 100 சதவீதமாக இருந்திருக்கும். ஆனாலும் யாரும் இதுவரை எட்டமுடியாத 99.94 சராசரியை டெஸ்டில் போட்டியில் கொண்டுள்ளார். 


 



இதேநாளில் தான் 1990 ஆம் ஆண்டு கபில்தேவ், சஞ்சய் மஞ்சிர்கர் மற்றும் திலிப் வெங்ஸ்கார் மற்றும் சச்சின் போன்ற வீரர்களை கொண்ட இந்திய அணி முகம்மது அசாருதீன் தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்திற்கு இடையிலான மூன்று டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் 247 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி. இதன் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 519 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸில் 432 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 320 எடுத்து, இந்தியாவுக்கு 408 ரன்கள் வெற்றி இலக்காக கொடுத்தது. வெற்றியை நோக்கி விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 109 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. இந்த சூழ்நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர் நன்றாக விளையாடி டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார். இதில் சச்சின் 119 ரன்கள் எடுத்தார்.