14 வருடங்களுக்கு முன் இதே நாளில் யுவராஜின் சாதனை!
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் இதே நாளில்தான் யுவராஜ்சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தார்.
முதல்முறையாக டி20 உலகக் கோப்பை 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் குரூப் ஈ யில், இங்கிலாந்து - இந்திய அணியில் 21வது போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில்தான் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்தார்.
சாதாரணமாக நடந்து கொண்டிருந்த அந்த போட்டியில் 18ஆவது ஓவருக்கு முன்பு இங்கிலாந்து அணியின் பிலின்டாப்பிர்க்கு, இந்திய அணியின் யுவராஜ் சிங்கிற்கும் 17வது ஓவரின் முடிவில் சிரிய மோதல் ஏற்பட்டது. களத்தில் யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி இருந்தனர். யுவராஜ் சிங் 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து 18-வது ஓவரை எதிர்கொள்ள காத்திருந்தார். இந்த ஓவரை ஸ்டூவர்ட் பிராட் பந்து வீசினார்.
முதல் பந்தில் லெக்சைட் கவர் திசையில் சிக்ஸர் அடித்தார். இரண்டாவது பந்தில் லாங்ஆப் பக்கம் சிக்ஸர் அடித்தார். மூன்றாவது பந்தில் ஒயிடு லாங்ஆப் பக்கம் சிக்ஸர் பறந்தது. தொடர்ந்து 3 சிக்சர்கள் வந்ததும் பார்வையாளர்களும், இந்திய கிரிக்கெட் அணியினரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து நான்காவது பந்து ஃபுல் டாஸ் ஆக வர அப்பர் கட் மூலம் சிக்ஸர் அடித்தார். 5வது பந்து லாங் ஆப் மேல் பறந்தது. கமெண்ட்ரியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஆறாவது பந்து சிக்ஸ்சராக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தனர். ஆறாவது பந்திலும் லெக்சைட் சிக்சர் அடித்து, டி20 வரலாற்றில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து முதல் முறையாக சாதனை படைத்தார் யுவராஜ் சிங்.
6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த இவர் 18வது ஓவரின் முடிவில் 12 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த சாதனையை இன்று வரை எவராலும் முறியடிக்க முடியவில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் யுவராஜின் இந்த 18-வது ஓவரை பார்க்காமல் இருந்ததில்லை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR