இலங்கைக்கு அடிக்கு மேல் அடி!!
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாறி வருகிறது. இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் நுவான் பிரதீப் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியறினர்.
நுவான் பிரதீப், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தசைப்பிடிப்பு காரணமாக நுவான் பிரதீப் வெளியேறினார். காயம் குணமாக 2 மாதங்கள் வரை ஆகும் என்பதால் இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள போட்டிகளில் இனி அவரால் விளையாட முடியாத நிலையில் தொடரில் இருந்து விலகினார்.
இதேபோல் முதல் போட்டியில் கேப்டன் சண்டிமால் காயம் காரணமாக ஆடவில்லை. நட்சதிர வீரர் ஹெராத்தும் அதே போட்டியில் காயம் காரணமாக வெளியேறினர். தற்போது நுவான் பிரதீப்பும் காயமடைந்து விலகியது இலங்கை ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.