18:56 03-06-2019
இன்று நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 84(62) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மொத்தம் மூன்று வீரர்கள் அரை சதத்தை பூர்த்தி செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

349 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் காண உள்ளது.


 



 



டெல்லி/இங்கிலாந்து: இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 6-வது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.


இங்கிலாந்து ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள போட்டி பாகிஸ்தானுக்கு முக்கியமானதாகும். 


இதுவரை ஐந்து போட்டிகள் முடிவுற்ற நிலையில், தென்னாப்பிரிக்கா விளையாடிய இரண்டு போட்டியிலும், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பாகிஸ்தான் தலா ஒரு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வெற்றியை பதிவு செய்துள்ளது.



இங்கிலாந்து அணி வீரர்கள்: ஜோன்ஸ் ராய், ஜோனி பைர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லெர் , மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷிட், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்றனர்.


பாகிஸ்தான் அணி வீரர்கள்: ஃபார்கார் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் ஆசாம், முகமது ஹபீஸ், சர்பாராஸ் அஹ்மத்(கேப்டன்) , சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, ஷதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமீர் ஆகியோர் இடம் பெற்றனர்.