ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் ஆரம்பம் முதலே போட்டி பரபரப்பாக சென்றது. கட்டுகோப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணியை 129 ரன்களுக்கு சுருட்டியது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு வெற்றியைப் பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கன் கேப்டன் கோபம்


பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்ததால், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நஷீம் ஷா அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். போட்டிக்குப் பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, "வெற்றி பெற வேண்டும் என கடுமையாக உழைத்தோம். ஆனால், முடிவு எங்கள் கைகளில் இல்லை. கடைசி ஓவரை சிறப்பாக வீசியிருக்கலாம். ஸ்லோ பவுன்சர் அல்லது யார்க்கர் என இரண்டு ஆப்சன்களில் பந்துவீசுமாறு பவுலரிடம் கூறியிருந்தேன். ஆனால், அவரின் முயற்சி கைகொடுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.


மேலும் படிக்க | Sixes of Naseem: பாகிஸ்தானை ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்ற நசீம் வீடியோ


ரசிகர்கள் ரகளை


ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்களிடையே ரகளை ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கோபத்தின் உச்சத்தில் இருந்த ரசிகர்கள் சிலர், மைதானத்தில் இருந்த நாற்காலிகளை உடைத்தெறிந்து, ஒருவர் மீது ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், மைதானம் ஒரே களேபரமாக காட்சியளித்தது.


யுஏஇ எச்சரிக்கை


இந்தக் கலவரத்தை தொடர்ந்து கடும் எச்சரிக்கையை யுஏஇ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மைதானத்தில் கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள யுஏஇ, இதுபோன்ற அசம்பாவிதங்களில் வரும் நாட்களில் ஈடுபடக்கூடாது என கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.


மேலும் படிக்க | AsiaCup2022: ஆப்கானிஸ்தான் வீரரை அடிக்க சென்ற பாகிஸ்தான் வீரர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ