Asiacup 2022: ஆப்கானிஸ்தான் பவுலரை அடிக்க பாய்ந்த பாக்.வீரர்; நடவடிக்கை எடுக்குமா ஐசிசி

ஆப்கானிஸ்தான் பவுலரை பாகிஸ்தான் வீரர் பேட்டைக் கொண்டு அடிக்க பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 8, 2022, 01:19 PM IST
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி
  • மோதிக் கொண்ட பாக் - ஆப்கான் வீரர்கள்
  • நடவடிக்கை எடுக்குமா ஐசிசி?
Asiacup 2022: ஆப்கானிஸ்தான் பவுலரை அடிக்க பாய்ந்த பாக்.வீரர்; நடவடிக்கை எடுக்குமா ஐசிசி title=

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஷார்ஜாவில் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங்காக வெற்றி பெற்றது. மேலும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதால் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. 130 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணிக்கு, கடும் நெருக்கடியை கொடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. 

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தால், போட்டியானது மதில்மேல் பூனையாக சென்றது. கடைசி ஓவரில் 11 ரன்கள் மதேவைப்பட்டது. களத்தில் நஷீம் ஷா மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோர் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் கையே ஓங்கியிருந்ததால், அந்த அணி வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடைசி ஓவரை ஆப்கானிஸ்தான் அணியின் ஃபசல்ஹக் ஃபரூக்கி வீசினார். சிறப்பாக வீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளையும் புல்டாசாக வீசி அந்த பந்துகளை எதிர்கொண்ட நசீம் ஷா சிக்சர்களாக மாற்றி அசத்தினார். அத்துடன் பாகிஸ்தான் அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 

மேலும் படிக்க | Team India: இந்த பிளேயர் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்!

இதற்கு முந்தைய ஓவரில் தான் துருதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்றது. அகமது மாலிக் வீசிய பந்தை சிக்சருக்கு விளாசிய அசீப் அலி, அடுத்த பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது இருவருக்கும் இடையே முறைச்சல் காரசமாக எழ, ஆசிப்அலி திடீரென ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளரை பேட்டில் அடிக்க சென்றார். உடனடியாக மைதனாத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் மற்றும் கள நடுவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

அதில், போட்டி விதிமுறைக்கு மாறாக களத்தில் நடந்து கொண்ட ஆசிப் அலிக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், ஆசிப் அலிக்கு கோபத்தை மூட்டிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளருக்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என ஒரு சாரார் பதிலடி கொடுத்துவருகின்றனர். டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடங்களில் #BanAsifAli ஹேஸ்டேக் டிரெண்டாகியுள்ளது.

மேலும் படிக்க | சேவாக் ஆருடம் பலித்தது; ரோகித் செய்த இந்த தவறுகளால் இந்திய அணி தோல்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News