அவுட் கொடுக்காத அம்பயருக்கு பாகிஸ்தான் பவுலர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
அவுட் கொடுக்காத அம்பயருக்கு பாகிஸ்தான் பவுலர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி ராவல்பிண்டி மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி செய்த சம்பவம் இணையதில் வைரலாகியுள்ளது.
கேலி செய்த ஹசன் அலி
ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானின் ஹசன் அலி , சல்மான் அலி ஆகாவுக்கு பந்துவீசினார். அவர் வீசிய பந்து, சல்மானின் பேடில் பட்டது. உடனடியாக அவுட் கேட்டு ஹசன் அலி அம்பயரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர் அவரின் முறையீட்டை நிராகரித்து அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், அதிருப்தியில் இருந்த ஹசன் அலி, நடுவரிடம் சென்றார். அவரின் விரலைப் பிடித்து, அவுட் கொடுக்க விரலை உயர்த்துமாறு கையை உயர்த்தினார். இது மைதானத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர், ஹசன் அலி சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.
மேலும் படிக்க | துணி விற்கும் சர்வதேச முன்னாள் கிரிக்கெட் நடுவர் - பிசிசிஐ மீது கடும் விமர்சனம்
இலங்கை சுற்றுப்பயணம்
இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் அணி, முதலில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூலை 16 ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 24 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு பயம்காட்டிய அயர்லாந்து அணிக்கு குவியும் பாராட்டு
டெஸ்ட் அணியில் இடம்
இலங்கை சுற்றுப் பயணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய வீரர்களே பெரும்பாலும் உள்ளனர். அதேநேரத்தில் ஜாஹித் மசூத், சஜித் கான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. சஃப்ராஜ் கான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். நசீம் ஷா மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் முதல் முறையாக அணியில் இடம் பிடித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR