புதுடெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் ஆசம், பல நாட்களாக அவர் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு இலக்கை அடைந்து விட்டார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் அவ்வப்போது ஒப்பிடப்படுவது வழக்கமான ஒன்றாகும். இப்போது ஒரு விஷயத்தில் அவர் விராட் கோலியையும் பின்னுக்குத் தள்ளி விட்டார். எந்த விஷயத்தில்? இங்கு பார்க்கலாம்!


ஒரு நாள் போட்டிகளில் முதலிடத்தில் பாபர்
பாபர் ஆசம், ஐ.சி.சி (ICC) ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் (ICC ODI Rankings) பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 2017 முதல் முதலிடத்தைத் தக்க வைத்திருந்த விராட் கோலியை (Virat Kohli) அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். 50 ஓவர்களைக் கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி 1,258 நாட்களுக்கு முதலிடத்தில் இருந்தார்.  



ALSO READ: ரோகித் பற்றி மோசமான கமெண்ட், ஸ்விகிக்கு எதிர்ப்பு!


விராட் கோலியை பாபர் முந்தியது எப்படி?
விராட் கோலி இங்கிலாந்துக்கு (England) எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டித் தொடரில் 129 ரன்களை மட்டுமே எடுத்தார். இதில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 


மறுபுறம், பாபர் ஆசம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடியாக ஆடினார். அவர் 3 ஒரு நாள் போட்டிகளில் 76 என்ற சராசரியில் 228 ரன்களை எடுத்தார். இதற்கான பலனை அவர் உடனுக்குடன் பெற்றார். ஐ.சி.சி ரேங்கிங்கில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. உலக அளவில் அதிரடியான பேட்ஸ்மேனாக இருக்கும் விராட் கோலியையும் அவர் பின்னுக்குத் தள்ளி விட்டார் என்பது அதை விடப் பெரிய விஷயமாகும்.  


ALSO READ: IPL 2021: 2வது இடத்தில் மும்பை, ஆரஞ்சு மற்றும் பர்பல் நிற தொப்பி யாருக்கு?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR