'உங்கள் சுயவிவரப் படமும், முழு படமும்' ('Your profile picture vs the full picture') என்று ஐ.சி.சி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலியை ட்ரோல் செய்தது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
நெட்டிசன்களில் பெரும்பாலோர் இந்த பதிவின் நகைச்சுவையை ரசித்தார்கல். கிரிக்கெட் வாரியம், ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை ட்ரோல் செய்வதை நம்பமுடியவில்லை என பலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Your profile picture vs the full picture #PAKvSA pic.twitter.com/jMw1niI0co
— ICC (@ICC) January 28, 2021
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது ஆட்டமிழந்ததை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது.
இடதுபுறத்தில் உள்ள படம் பெரிதாக்கப்பட்டுள்ளது, அங்கு ஹசன் அலியின் பின்னால் ஸ்டம்புகள் தெரியவில்லை மற்றும் வலதுபுறத்தில் உண்மையான புகைப்படம் ஸ்டம்ப் கீழே விழுந்துக் கிடப்பதை காட்டுகிறது. இதை பகிர்ந்துக் கொண்ட ICC, “Your profile picture vs the full picture என்று குறிப்பிட்டுள்ளது.
Also Read | Australian Open: தனிமைப்படுத்தல் முடிந்த நிலையில், சூடு பிடிக்கும் டென்னிஸ் களம்
இந்தப் பதிவு பல டிவிட்டர் கணக்காளர்களின் கோபத்தைத் தூண்டியது. கண்ணியம் இல்லாத ஐ.சி.சி என்றும், இதை நகைச்சுவை உணர்வுடன் அணுக வேண்டும் என்று பலரும் கலவையான எதிர்விளைவுகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இந்த பதிவின் நகைச்சுவையை ரசித்தாலும், ஒரு கிரிக்கெட் வீரரை ட்ரோல் செய்ய கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு பலருக்கு அதிருப்தி அளித்துள்ளது.
Hasan Ali after see this trolling tweet from ICC:- pic.twitter.com/4bsMNqmum7
— ABDULLAH NEAZ (@abdullah_neaz) January 28, 2021
கராச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டனர் பாகிஸ்தான் வீரர்கள். பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களான யாசிர் ஷா மற்றும் நெளமான் அலி ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பாகிஸ்தானுக்கு ஆட்டத்தின் மூன்றாம் நாள் சிறப்பாகவே இருந்தது.
Trolling level
— (@ShriMITAKARI) January 28, 2021
Markram மற்றும் van der Dussen,158 ரன்கள் எடுத்திருந்தாலும், யாசிர் மற்றும் நெளமன் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை 187-4 என்ற அளவில் குறைத்தனர். முன்னதாக, பாகிஸ்தான் காலையில் 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, ஷா 38 ரன்கள் எடுத்தார்.
Also Read | சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR