டி20யில் சிறந்த அணி என்று மீண்டும் நிரூபித்த பாகிஸ்தான்: பங். எதிராக அபார வெற்றி!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி, லீக் ஆட்டத்தில் ஒரு முறை கூட தோல்வி அடையாமல் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் டி20 போட்டி டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் அப்பிரிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.
ALSO READ பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பதவியை ராஜினாமா செய்த ஆஸ்திரேலிய கேப்டன்!
ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான், பங்களாதேஷ் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தியது. பவர்பிளே முடிவதற்கு முன்பே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். கேப்டன் மஹ்முதுல்லாஹ்ம் 6 ரன்களுக்கு வெளியேறினார். அதன் பின் நிதானமாக விளையாடிய அஃபிஃப் ஹொசைன் மற்றும் நூருல் ஹசன் அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடைசியில் அதிரடி காட்டிய மெஹ்தி ஹசன் 20 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே அடித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி (Hasan Ali) 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
யாரும் எதிர்பார்க்காத விதமாக பேட்டிங்கில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை திணறடித்தனர் பங்களாதேஷ் பவுலர்கள். சிறந்த ஓப்பனிங் பாட்நெர்ஷிப் என்று பெயர் பெற்ற ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரையும் Clean Bowled எடுத்தனர். ஹைதர் அலி மற்றும் மாலிக் ரன்கள் ஏதும் இன்றி வெளியேற பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்களை இழந்து 24 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது. பங்களாதேஷ் பக்கம் சாய்ந்த போட்டியை ஃபகார் ஜமான் மற்றும் குஷ்தில் ஷா கூட்டணி சிறப்பாக விளையாடி தோல்வியில் இருந்து மீட்டது. 12 பந்துகளுக்கு 17 ரன்கள் தேவைபட்ட நிலையில் 19.2 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. தோல்வி அடைய வேண்டிய போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.
ALSO READ நியூ. எதிரான இரண்டாவது டி20 போட்டியை காண மைதானத்திற்கு வருவாரா தோனி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR