ஆஸ்திரேலியாக்கு எதிரான தொடரில் இருந்து ஹாசன் அலி விலகல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் இருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, முதுகுவலி பிரச்சினை காரணமாக விலக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் இருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, முதுகுவலி பிரச்சினை காரணமாக விலக்கப்பட்டுள்ளார்.
சொந்த மண்ணில் இலங்கைக்கு டி20 தொடருக்கு முன்னர் அவருக்கு ஏற்ப்பட்ட முதுகெலும்பில் பிரச்சனையில் இருந்உத மீண்டு வர ஹசன் தவறிவிட்டார் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில இருந்து விலக்கியுள்ளது.
மேலும் மூன்று வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அலி பங்கேற்பாரா என்பது, மூன்று வார காலத்திற்குப் பிறகு அவரது உடற்பயிற்சி சோதனையின் முடிவைப் பொறுத்து அமையும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் நவம்பர் 3, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் பாகிஸ்தான் விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பது அலியால் முடியாத காரியம் என வாரியம் குறிப்பிட்டு அவரை தொடரில் இருந்து விலக்கி வைத்துள்ளது.
25 வயதான பாகிஸ்தான் பந்துவீச்சாளர், பாகிஸ்தான் அணி தாக்குதலில் ஒரு முக்கிய வீரராக இருந்து வருகிறார், குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மற்றும் மூன்று வடிவங்களிலும் சேர்த்து அவர் 148 விக்கெட்டுகளை குறுகிய காலத்தில் வீழ்த்தியுள்ளார்.
53 ஒருநாள், 30 டி20 மற்றும் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்திய ஹசன் அலி, ஆகஸ்ட் மாதம் துபாயில் ஒரு இந்திய நாட்டவரை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.