பாகிஸ்தான் பந்துவீச்சு 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20 ஓவர் உலக கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பிட்சின் நிலைமை சரியாக கணித்த பாகிஸ்தான் அணி, துல்லியமான திசையில் பந்துகளை வீசி நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தது. ஆரம்பத்திலேயே, பின் ஆலமை இழந்த அந்த அணியில், பின் வந்த வீரர்கள் நிதானமாக ஆடினர். ஆனால், ரொம்ப நிதானமாக ஆடியது நியூசிலாந்து அணிக்கு பிரச்சனையாக மாறியது.


வில்லியம்சன் மெத்தன ஆட்டம்


கேப்டன் வில்லியம்சன் நிதானமாக ஆடுவதாக நினைத்து மெத்தனமாக ஆடினார். அவர் 42 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானது, நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோரை நிர்ணயிக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம். பின்வரிசையில் அதிரடியாக ஆடி டேரி மிட்சல் 35 பந்துகளில் 53 ரன்கள் விளாசியது, ஓரளவுக்கு சவாலான ஸ்கோரை  எடுக்கவே உதவியது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.


மேலும் படிக்க | கழட்டிவிடும் டெல்லி... மீண்டும் சிஸ்கேவுக்கு வரும் Lord - தோனி போடும் புதுகணக்கு!


பாகிஸ்தான் அணி அபாரம்


பந்துவீச்சில் கலக்கியதுபோலவே பாகிஸ்தான் அணி பேட்டிங்கிலும் கலக்கியது. ஓப்பனிங் இறங்கிய ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் விக்கெட் பறிகொடுக்காமல் விளையாடினர். முதல் ஓவரில் நியூசிலாந்து வீரர் கான்வோ, பாபர் ஆசமின் கேட்சை கோட்டைவிட்டது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால், நங்கூரம்போல் நிலைத்து நின்ற பாபர் ஆசமும், ரிஸ்வானும் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்து அடித்தளத்தை அமைத்தனர். 


இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்


அதேநேரத்தில் நியூசிலாந்து அணியின் பீல்டிங்கும் படு சுமாராகவே இருந்தது. இவையெல்லாம் சாதகமாக்கிக் கொண்ட பாகிஸ்தான் அணி, 153 ரன்கள் எடுத்து 2022 ஆம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. சூப்பர் 12 சுற்றோடு வெளியேறிய அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான், இப்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்களின் எதிரணிக்காக காத்துக் கொண்டிருக்கிறது.


மேலும் படிக்க | T20 Worldcup 2022: அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ