ஆசிய கோப்பை 2023: இரண்டு முறையும் டிஆர்எஸ் தவறாக எடுத்த பாகிஸ்தான் அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் தவறாகவே டிஆர்எஸ் எடுத்தது. விக்கெட் கீப்பிங் செய்த முகமது ரிஸ்வான் தான் இதற்கு காரணம்.
கொழும்பில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் ரிசர்வ் நாளில் இன்று மீண்டும் நடைபெற்றது. இந்திய அணி நேற்று விளையாடிய 24.1 ஓவரில் இருந்து தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமாவும் சிறப்பாகவும் பேட்டிங் செய்தனர். பாகிஸ்தான் அணியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஹரீஷ் ராவுப் தசைபிடிப்பு காரணமாக பந்துவீசவில்லை.
கே.எல்.ராகுல் அரைசதம்
இந்திய அணியின் பேட்டிங் இன்றும் மழை காரணமாக தாமதமாகவே தொடங்கியது. இருப்பினும் கள நடுவர்கள் முழுமையாக 50 ஓவர் போட்டி நடைபெறும் என அறிவித்தனர். அதனடிப்படையில் களம் கண்ட இந்திய அணியில் கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 2 சிக்சர்கள் தனக்கே உரிய கிளாஸாக அடித்தது காண்போரை ரசிக்க வைத்தது. மறுமுனையில் விராட் கோலி வழக்கம்போல் நங்கூரமாக நிலைத்து நின்று சிறப்பாக ஆடினார். அவரும் அரைசதம் விளாச இந்திய அணி வலுவான நிலைக்கு முன்னேறியது.
மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு எதிரான சச்சினின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
பாகிஸ்தானின் தவறான முடிவு
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான முகமது நசீம் பந்துவீச்சில் விராட் கோலி மற்றும் ராகுல் கொஞ்சம் தடுமாறினர். அப்போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் பிரஷராகவே இருந்தது. அந்த நேரத்தில் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் தவறு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோது, பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்ப்பர் முகமது ரிஷ்வான் ஒரு தவறை செய்தார். அது இந்திய அணிக்கு சாதமாக இருந்தது. அதாவது விராட் கோலியின் தை பேடில் பட்டு வந்த பந்துக்கு கேட்ச் அப்பீல் செய்ததுடன், கேப்டன் பாபர் அசாமிடம் முறையிட்டு டிஆர்எஸ்ஸூம் எடுக்க வைத்தார். ஆனால் ரிப்ளேவில் தை பேடில் பந்து பட்டது தெளிவாக தெரிந்தது.
ரோகித் சர்மாவுக்கும் அப்பீல்
இதனால் பாகிஸ்தான் வீரர்கள் அப்செட்டானார்கள். விராட் கோலி அப்பீல் கேட்டவுடனேயே இது அவுட் இல்லை என சிரித்துக் கொண்டே கூறினார். நேற்று விளையாடியபோது ரோகித் சர்மாவுக்கும் இதேபோல் தவறாக டிஆர்எஸ் அப்பீல் பாகிஸ்தான் தவறாக எடுத்தது. இரண்டு முறையும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் டிஆர்எஸ் பாகிஸ்தான் எடுத்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது.
மேலும் படிக்க | IND vs PAK: விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த கேஎல் ராகுல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ