ஆசிப் அலியின் அசத்தலில் பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை டி20 2021யில் இன்று துபாயில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடியது. குரூப் B-யில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியதால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.
யாரும் எதிர்பார்க்காத விதமாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கி ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் 0 மற்றும் 8 ரன்களில் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய குர்பாஸ், அஸ்கர் ஆப்கான், கரீம் ஜனத், நஜிபுல்லா ரன்கள் அடிக்க தவறினர். பின்பு 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் நபி மற்றும் குல்பாடின் கடைசி விக்கெட்டுக்கு 71 ரன்கள் அடித்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தினால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்கள் அடித்தது.
வெற்றிகரமான ஓபனிங் பார்ட்னர்ஷிப் என்று பெயர் பெற்ற பாகிஸ்தான் அணி ஓபனிங் பேட்ஸ்மேன் ரிஸ்வான் 8 ரன்களுக்கு வெளியேறினார். சிறப்பாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். ஃபகார் ஜமான் 30 ரன்களுக்கு அவுட்டானார். அதற்குப்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் சொதப்பலாக விளையாட போட்டி ஆப்கானிஸ்தான் பக்கம் திரும்பியது. 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது பாகிஸ்தான். ஆசிப் அலியின் அற்புதமான பேட்டிங்கினால் 19வது ஓவரிலேயே 4 சிக்சர்களை அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பை டி20யில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
ALSO READ 1 பந்துக்கு 4 ரன்! திரில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR