2019-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு எஃப்சி கால்பந்தாட்ட அணியில் விளையாடி வரும் பராக் ஸ்ரீவாஸ், ஃபுல்-பேக் மற்றும் சென்டர்-பேக் என இரண்டிலும் விளையாடக் கூடியவர் ஆவார். 25 வயதான பராக் ஸ்ரீவாஸ், பெங்களூரு அணியின் முக்கிய வீரராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் 27 ஆட்டங்களில் பராக்  ஸ்ரீவாஸ் விளையாடி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது பெங்களூரு எஃப்சி கால்பந்தாட்ட அணியில் மேலும் 3 ஆண்டுகளுக்கு விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் பராக் ஸ்ரீவாஸ் கையெழுத்திட்டார்.


மேலும் படிக்க | IND vs ENG: புஜாரா அவுட்டை கொண்டாடிய இந்திய வீரர்கள்



பெங்களூரு எஃப்சி அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ள பராக் ஸ்ரீவாஸ், இந்த அணியில் இணைந்ததில் இருந்து ஒரு வீரராக தான் நிறைய கற்றுக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். தனக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கியதற்காக அணியினர், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு தான் நன்றியுள்ளவனாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் தனக்கு வரும் வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்த விரும்புவதாகவும் பராக் ஸ்ரீவாஸ் கூறினார்.


மேலும் பெங்களூரு எஃப்சி அணியில் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய சிமோன் க்ரேசன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பயிற்சியாளரின் கீழ் விளையாட மிகுந்த ஆவலுடன் உள்ளதாகவும்  பராக் ஸ்ரீவாஸ் கூறியுள்ளார்.


மேலும் படிக்க  | யார் இந்த சர்ஃபராஸ் கான்? விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR