பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடந்த இந்த விளையாட்டு போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் மரக்கானா ஸ்டேடியத்தில் நேற்று அதிகாலை நடை பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல்பர் நிஷாத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 


உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றவரான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு அவர்கள் கொடி அணிவகுப்பின் போது, இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார். 


107 தங்கப் பதக்கங்கள் உட்பட 239 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து 147 பதக்கங்களுடன் உள்ளது. 


இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் இந்த பதக்க பட்டியலில் இந்தியா 43-வது இடத்தைப் பிடித்துள்ளது.