PM Cares Fund-க்கு 50,000 டாலர் நன்கொடை அளித்தார் Pat Cummins: `Thanks Pat`-ரசிகர்கள் உருக்கம்
IPL-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போரில், தனது பங்களிப்பாக 50,000 டாலர் அளித்துள்ளார்.
புதுடெல்லி: இந்தியா தற்போது கொரோனா வைரஸின் பிடியில் வலுவாக சிக்கியுள்ளது. கோவிட் தொற்றுநோயால் நாட்டின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்து வருகின்றனர்.
இதற்கிடையில், IPL-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் (Pat Cummins), கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போரில், தனது பங்களிப்பை அளித்துள்ளார். இவரது செயலுக்காக ரசிகர்கள் இவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
பாட் கம்மின்ஸ்ஸின் உதவி
இந்தியாவில் கோவிட் -19 (COVID-19) தொற்றுநோய் காரணமாக நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிக்கொள்ள உதவ, 'பி.எம் கேர்ஸ் ஃபண்டுக்கு' 50,000 டாலர் நன்கொடை அளிப்பதாக பாட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். IPL போட்டிகள் தொடர்ந்து நடப்பதை இந்திய அரசு ஆதரிக்கிறது என்றும், இந்த கடினமான நேரத்தில் இந்த போட்டிகள் மக்களுக்கு 'சில மணிநேர மகிழ்ச்சியை' அளிக்கின்றன என அரசு நம்புவதாகவும் தான் அறிந்து கொண்டதாக கம்மின்ஸ் தெரிவித்தார்.
பாட் கம்மின்ஸ் ட்வீட் செய்துள்ளார்
பாட் கம்மின்ஸ் இதைப் பற்றி ட்விட்டரில் அறிவித்ததோடு, இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கித் தவிப்பதால், மற்ற கிரிக்கெட் வீரர்களும் தங்களாலான உதவிகளை செய்ய வெண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில், "கோவிட் -19 நோய்த்தொற்றின் வீதம் மிக அதிகமாக இருக்கும்போது IPL-ஐ தொடர்வது சரியானதா என்பது குறித்து இங்கு பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன." என்று கூறினார்.
'ஐ.பி.எல் மூலம் சிறிய ஆறுதல்'
பாட் கம்மின்ஸ் மேலும் ' நாடு ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும்போது, வீட்டில் முடங்கியுள்ள மக்களுக்கு IPL விளையாட்டுகளால் மக்களுக்கு சில மணி நேர ஆறுதல் கிடைப்பதாக இந்திய அரசு நம்புவதாக நான் அறிந்துகொண்டேன்' என்றும் தெரிவித்துள்ளார். திங்களன்று, இந்தியாவில் 3.53 லட்சம் பேர் புதிதாக தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு தொற்று துவங்கியதிலிருந்து, உலகம் முழுவதிலும் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஒற்றை நாள் பதிவாகும் இது.
ALSO READ: IPL 2021 போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் அஸ்வின்; காரணம் என்ன
'Thanks Pat' - ரசிகர்கள் ட்விட்டரில் பாராட்டு
கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் தனது இந்த செயலால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்து விட்டார். ட்விட்டரில் மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் 'Thanks Pat'-ஐயும் டிரெண்ட் செய்து வருகின்றனர். ட்விட்டரில் நெட்டிசன்கள் பல விதங்களில் பாட் கம்மின்சுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சில நெட்டிசன்களின் போஸ்டுகள் உங்கள் பார்வைக்கு:
ALSO READ: உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி அளித்தார் தலைமை நீதிபதி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR