Pat Cummins Warning | பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 முதல் தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருக்கின்றன. இந்த சூழலில் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், இந்திய அணிக்கு மிகப்பெரிய எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உலக செஸ் சாம்பியன் குகேஷ்... வெற்றி பெற்றது எப்படி? முதல் ரியாக்ஷன்


பாட் கம்மின்ஸ் எச்சரிக்கை


பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அடிலெய்ட் டெஸ்டில் ஆஸ்திரேலியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. மூன்றாவது போட்டி நாளை தொடங்குகிறது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், "அடிலெய்டு டெஸ்டில் இரண்டு உத்திகளை வைத்திருந்தோம். பிளான் ஏ, பிளான் பி என்ற இரண்டு உத்தியில் பிளான் பி கை கொடுத்தது. அதைபோல் போலவே மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி செயல்படும்" என்றார்.


ஆஸ்திரேலியா உத்தி என்ன?


தொடர்ந்து பேசிய பாட் கம்மின்ஸ், "ஜஸ்பிரித் பும்ராவை தைரியமாக எதிர்கொள்வது தான் எங்களுடைய பிளான். பெர்த் டெஸ்ட் போட்டியில் அந்த உத்தி எங்களுக்கு கை கொடுக்கவில்லை. அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக அந்த உத்தியை கையாண்டோம். பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களை பாராட்ட வேண்டும். நாங்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள், எந்தச் சூழலையும் எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் தயாராக உள்ளனர். அனுபவமிக்க ஸ்டீவ் ஸ்மித் இதுவரை தொடரில் சிறப்பாக செயல்படவில்லை, ஆனால் விரைவில் பார்முக்கு திரும்புவார்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ஸ்மித் மீது கம்மின்ஸ் நம்பிக்கை


"ஸ்டீவ் ஸ்மித் நெட்ஸில் சிறப்பாக செயல்படுகிறார். அவர் சிறப்பாக செயல்படுவார் என உறுதியாக நம்புகிறேன். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் மற்றும் ஒரு நல்ல இன்னிங்ஸ் வெகு தொலைவில் இல்லை" என பாட் கம்மின்ஸ் கூறினார். ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆக்ரோஷமான விளையாடும் உத்தியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார், ஆனால் கம்மின்ஸ் பேட்டிங் உத்தி என்பது தனிப்பட்ட விருப்பம் என்று கூறினார். கம்மின்ஸ் மேலும் கூறுகையில், 'டிராவிஸ் மற்றும் மிட்ச் ஆகியோர் ஸ்ட்ரோக் விளையாடும் இயல்பான பேட்ஸ்மேன்கள். காபா மைதானம் முதல் நாளிலிருந்து வித்தியாசமாக இருக்கும், எனவே உங்கள் பலத்தில் விளையாடுவது முக்கியம். அதைத்தான் டிராவிஸ் கடந்த வாரம் செய்தார்." என தெரிவித்தார்.


கேப்டனாக இருப்பதால் தனக்கு எப்போதும் அழுத்தம் இருக்கும் என்பதை ஒப்புக்கொண்ட கம்மின்ஸ், ஆனால் இந்த அழுத்தத்துடன் வாழ கற்றுக்கொண்டேன் என்று கூறினார். கேப்டனாக விளையாடும்போது எப்போதும் அழுத்தம் இருக்கும். கேப்டனாக இருப்பதால் உங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. பெர்த் டெஸ்டில் எங்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை, விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை." என ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | IND vs AUS: மீண்டும் இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்துள்ள டிராவிஸ் ஹெட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ