இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களை கடந்து மற்ற போட்டிகளில் நீண்ட வருடங்களாக விளையாடவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் அரசியல் ரீதியான பிரச்சனைகளுக்கு முற்றிலுமாக தீர்வு காணும் வரை, இருநாட்டு தொடர்களில் விளையாடப்போவதில்லை என்ற முடிவில் இந்தியா இருக்கிறது. பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு பதிலடியாக பல்வேறு வகைகளில் இந்தியா பாகிஸ்தானுடனான தொடர்புகளை துண்டித்துள்ளது. அதன் ஒருபகுதியாக கிரிக்கெட் போட்டிகளிலும் அந்நாட்டு அணியுடன் பங்கேற்பதை நிறுத்திக் கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தீபிகா படுகோனேவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்!


அரசியலை விளையாட்டில் புகுத்த வேண்டாம், பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடர்களை நடத்த இந்தியா முன்வர வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து வலியுறுத்தி வரும்போதிலும் இந்தியா அதனை தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக ரமீஸ் ராஜா பதவியேற்றபோதும், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி இருந்தபோதும் இதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன.


இந்தியா - பாகிஸ்தான் என இருநாடுகளிலும் அல்லாமல் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பொதுவான இடங்களில் இருநாட்டு கிரிக்கெட் தொடர்களை நடத்தவும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்போது மீண்டும் இருநாட்டு தொடர்களை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா பேசும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அவசியம் என தெரிவித்துள்ளார். இரு அணிகளும் டெஸ்ட் விளையாடினால், அது கிரிகெட்டுக்கும் நல்லது என தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பிசிசிஐ ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 


மேலும் படிக்க | பாகிஸ்தான் தோற்றது இந்தியாவுக்கு நல்லதுதான்... எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ