IPL 2021 கொரோனா (corona) காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற்றுவந்த ஐபிஎல் 2021 போட்டிகள் நிறுத்தப்பட்டது.  தற்போது மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளது.  இதனை தொடர்ந்து அணி வீரர்கள் ஐக்கிய அமீரகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ள மீதமுள்ள போட்டிகளில் தங்களது அணி வீரர்களை மாற்றி உள்ளது ஆர்.சி.பி, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணி ஸ்ரீலங்கா வை சேர்ந்த அசரங்காவை தங்களது அணிக்கு வாங்கியுள்ளது.  ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆடம் சாம்பாவிற்க்கு பதிலாக அசரங்காவை தங்களது அணியில் சேர்த்துள்ளது.  சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  மேலும் டானியல் சாமிற்கு பதிலாக சாமீரா, கேன் ரிச்சர்ட்சன் பதிலாக ஜார்ஜ் கார்டன் மற்றும் பின் ஆலன்க்கு பதிலாக  டிம் டேவிட்டை எடுத்துள்ளது ஆர்சிபி அணி.


ALSO READ IPL 2021: ஆர்சிபி அணிக்காக ஆடபோகும் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர்!


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிலிப்ஸ்ஐ இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் பதிலாக எடுத்துள்ளது.  சவுத் ஆப்பிரிக்கா சேர்ந்த தபிரைஸ் சம்சிஐ ஆண்டிரூவ் டைக்கு பதிலாக எடுத்துள்ளது.


பஞ்சாப் கிங்ஸ் அணி ரிலே மெரித்து க்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான நாதன் ஏழிசை எடுத்துள்ளது.  மேலும் ரிச்சர்ட்சன் க்கு பதிலாக இங்கிலாந்தின் லெக் ஸ்பின்னர் அடில் ரசித்தை அணியில் சேர்த்துள்ளது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டிம் சவுதியை தங்கள் அணியில் சேர்த்துள்ளது.  ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் க்கு பதிலாக டிம் சவுதியை எடுத்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYe