இந்திய தடகளத்தில் முன்னேற்றம் - நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து
டைமண்ட் லீக்கில் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதியில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 88.44 மீ தூரம் ஈட்டி எறிந்து டைமண்ட் லீக் சாம்பியன் ஆனார். இந்த வெற்றி டைமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ராவின் முதல் வெற்றியாகும். அதுமட்டுமின்றி இந்தியாவுக்கு கிடைத்த முதல் டைமண்ட் லீக் கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ச் தனது நான்காவது முயற்சியில் 86.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 83.73 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்
முதலில் ஒரு தவறுடன் தொடங்கிய நீரஜ் சோப்ரா, தனது இரண்டாவது முயற்சியில் 88.44 மீட்டர் எறிந்து முதலிடத்திற்கு முன்னேறினார். மேலும் அவர் தனது அடுத்த நான்கு வாய்ப்புகளில் முறையே 88.00 மீ, 86.11 மீ, 87.00 மீ மற்றும் 83.60 மீ என்ற தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். வெற்றி பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு டைமண்ட் டிராஃபி, 30,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை மற்றும் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறும் 2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்காக வைல்ட் கார்டு வழங்கப்பட்டது.
இதனையடுத்து நீரஜ் சோப்ராவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் ரசிகர்கள்வரை தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்தினை நீரஜ் சோப்ராவுக்கு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “டைமண்ட் லீக் டிராஃபியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் பதிவு செய்திருக்கிறார். அவரது சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மையை இது வெளிப்படுத்துகிறது. தொடர்ச்சியான வெற்றிகள் இந்திய தடகளம் செய்து வரும் பெரும் முன்னேற்றங்களைக் காட்டுகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதாகிறார் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ