பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதாகிறார் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்

ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக விளையாடிய நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சேன் பாலியல் புகாரில் கைது செய்யப்படவிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 9, 2022, 04:47 PM IST
  • நேபாளம் கிரிக்கெட் அணியின் கேப்டம் லமிச்சேன்
  • இவர் ஐபிஎல்லில் விளையாடுகிறார்
  • ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார்
 பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதாகிறார் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் title=

நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சேன். இவர் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர். லெக் ஸ்பின்னரான இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் கலந்துகொண்டு விளையாடிவருகிறார். இந்நிலையில் அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. கவுசாலா பெருநகர காவல் துறையில் அவர் மீது 17 வயது சிறுமி ஒருவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். அவர் அளித்திருக்கும் புகாரில், “நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்புகொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார். அதனையடுத்து அவர் என்னை 2 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்” என கூறியிருக்கிறார்.

Lamichanne

இந்தப் புகார் குறித்து, காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியின் காவல் துறை அதிகாரி ரவீந்திர பிரசாத் தனூக் கூறும்போது, இதுபோன்ற தீவிர சம்பவங்களில் காவல் துறையினர் அதிக கவனம் செலுத்தி விசாரணை நடத்துவார்கள். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியுள்ளோம். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையும் தீவிரமாக நடந்துவருகிறது என்றார்.

 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே 17-வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் பதிவானதை அடுத்து 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில் தற்போது சந்தீப் லமிச்சேனை கைது செய்ய வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அப்போ... நான் வெளிய உட்காரவா...' - கோலி சதத்திற்கு பின் கொந்தளித்த கேஎல் ராகுல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News