மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பொல்லார்டு இதுவரை ஃபார்முக்கு திரும்பவில்லை. அவருடைய பார்ம் அவுட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம். வழக்கமாக மிக மிக ஸ்டிராங்கான அணியாக மும்பை பேட்டிங்கில் இருக்கும். ஆனால், இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டுமே அந்த அணிக்கு செட் ஆகவில்லை. கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் 11 ஆட்டங்களாக சொதப்பி வருகின்றனர். இதனால், மும்பை அணி நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறியது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வானதிகிட்ட தோத்த கடுப்பை லிரிக்ஸ்ல இறக்கிட்டாராம்- ‘பத்தல’ பாட்டை பத்தவைத்த கஸ்தூரி!


பின்வரிசையில் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் பொல்லார்டும், ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இவர் மீது முழுமையாக நம்பிக்கை வைத்த மும்பை அணி, சுமார் 6 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்தது. ஹர்திக் பாண்டியாவைக் கூட மும்பை அணி நம்பவில்லை. அந்தளவுக்கு மும்பை அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் பொல்லார்டு,  11 ஆட்டங்களில் விளையாடி 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.



அவரது ஃபார்ம் அவுட் மும்பை ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் போட்டிகளிலாவது அவர் ஃபார்முக்கு திரும்புவாரா? என எதிர்பார்த்துள்ளனர். பொல்லார்டு இன்று 35வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நாளை இனிமையான நாளாக மாற்ற களத்தில் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். தனி ஒரு வீரராக மும்பை அணிக்கு பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்தமாதிரியான ஆட்டத்தை பிறந்தநாளான இன்றும் ஆடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 



மேலும், ஐபிஎல் தொடரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டும் அவர் எப்போதும் சிறப்பாக விளையாடுவார். இன்றைய போட்டியிலும் மும்பை அணி, பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்வதால், ஆட்டத்தில் அனல் பறக்கும். இப்போட்டியில் மும்பை வெற்றி பெற்றால் ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை வெளியேறிவிடும். சென்னை வெற்றி பெற்றால் நூலிழை வாய்ப்புடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறும். 


மேலும் படிக்க | புது கார் வாங்கிய விஜய் டிவி நாஞ்சில் விஜயன் - விலை எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR