புது கார் வாங்கிய விஜய் டிவி நாஞ்சில் விஜயன் - விலை எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியின் காமெடி நட்சத்திரமான நாஞ்சில் விஜயன் புதுக்கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 12, 2022, 11:28 AM IST
  • புது கார் வாங்கிய நாஞ்சில் விஜயன்
  • 13 லட்சம் ரூபாய் என தகவல்
  • புது வாங்கியதால் மகிழ்ச்சி உள்ள விஜயன்
புது கார் வாங்கிய விஜய் டிவி நாஞ்சில் விஜயன் - விலை எவ்வளவு தெரியுமா? title=

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி பிரபலங்களுக்கு ரசிகர்களிடம் எப்போது மவுசு உண்டு. அந்த சேனலில் வரும் காமெடி நட்சத்திரங்கள் பெரும்பாலனோர் மக்களின் பேவரைட்டாக உள்ளனர். குக் வித் கோமாளி முதல் கலக்கப்போவது யாரு வரை என விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் எல்லாமே மெகா ஹிட் நிகழ்ச்சிகள் தான். இதில் ஏதாவதொரு நிகழ்ச்சியில் தவறாமல் இடம்பெற்றுவிடுவார் நாஞ்சில் விஜயன். ரியாக்ஷன், காமெடி கவுண்டர் மற்றும் மொக்கை வாங்குவது இவருடைய தனி ஸ்டைல். 

மேலும் படிக்க | விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டர் குறித்து லீக்கான தகவல்

ராமருடன் சேர்ந்து இவர் செய்த ‘சொல்வதெல்லாம் பொய்’ நிகழ்ச்சி பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. அதன்பிறகு இன்னும் பிரபலமான நாஞ்சில் விஜயன், தொலைக்காட்சியைக் கடந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். தனக்கென ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இப்போது அவர் புதுக் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்புடைய கியா கார் வாங்கிய நெகிழ்ச்சியான வீடியோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

பல நாள் கனவே என்ற பேக்ரவுண்ட் சாங்குடன், தான் புதுக்கார் வாங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் கடந்து வந்த பாதை மற்றும் அதற்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துளார். அந்த நெகிழ்ச்சியான பதிவில்," என்னுடைய பயணத்தை எங்கே ஆரம்பித்தேன் என்ற நியாபகம் எனக்கு இன்னும் இருக்கிறது. டிரெய்னில் வாஷ்ரூமுக்கு அருகில் இருந்த சிறிய இடத்தில் அமர்ந்து கொண்டு சென்னைக்கு வந்தேன். கனவுகளுடன் வந்த நான், அதற்காக எல்லா விதமான ரிஸ்குகளையும் எடுத்தேன். இன்று நான் இருக்கும் இடத்தை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்.

முடியாதது எதுவும் இல்லை. இப்போது போல் அன்பும், காமெடியும் வந்து கொண்டே இருக்கும். மக்களை மகிழ்ச்சி படுத்திக் கொண்டே இருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் தாம்சம் மற்றும் நடிகை நளினி உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | வன்முறையின் பரவசத்தைத் தந்ததா ? ‘சாணிக் காயிதம்’ - திரை விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News