டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் நேற்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் தொடக்கம் தந்தனர். ஆனால், நசிம் ஷா வீசிய 2ஆவது ஓவரில் கேஎல் ராகுலும், ஹரிஷ் ராவுஃப் வசிய 4ஆவது ரோஹித் சர்மாவும் தலா 4 ரன்கள் எடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர். அதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும், அக்சர் படேலும் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி மிகவும் பரிதாபமான நிலையை எட்டியது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்பின் இக்கட்டான நிலையில் ஹர்திக் பாண்டியாவும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி சிறுக சிறுக ரன்களை சேர்த்து வந்தது.  சிறப்பாக விளையாடிய கோலி அஃப்ரிடி ஓவரில் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு நம்பிக்கையளித்தார். இதனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 


கடைசி ஓவரை முகமது நவாஸ் வீச அந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களில் அவுட்டாக, அடுத்ததாக வந்த தினேஷ் கார்த்திக்கும் வெளியேற இரண்டு பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால், 4ஆவது பந்தில் கோலி சிக்சர் அடிக்க மைதானம் அதிர்ந்தது. தொடர்ந்து அஷ்வின் ஸ்மார்ட்டாக ஒரு வைட் வாங்க ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற நிலை உருவானது. அஷ்வின் கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்னை அடித்தார். இதனால் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிக்கு ஒரே காரணமாக இருந்தார்.



விராட் கோலியின் இந்த இன்னிங்ஸை கண்ட ரசிகர்கள் பூரித்துபோயினர். மேலும் கோலியின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவருக்கு பாராட்டும் தெரிவித்தனர்.



இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அணி சிறப்பாக போராடி வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துகள். குறிப்பிடத்தக்க உறுதியை வெளிப்படுத்திய அற்புதமான இன்னிங்சிற்காக விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | IND vs PAK : பரபரப்பான போட்டியில் வென்றது இந்தியா - பட்டையை கிளப்பிய கோலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ