நொடியில் நொறுங்கியது புஜாரா-வின் நான்காவது இரட்டை சதம்!
சிட்னியில் நடைப்பெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் புஜாரா தனது 4-வது இரட்டை சதத்தினை தவறவிட்டார்!
சிட்னியில் நடைப்பெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் புஜாரா தனது 4-வது இரட்டை சதத்தினை தவறவிட்டார்!
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இறுதி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 3., துவங்கி நடைப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. துவக்க வீரராக களமிறங்கிய KL ராகுல் 9(6) ரன்களுக்கு வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 77(112) ரன்கள் குவித்தார்.
முதல் விக்கெடுக்கு களமிறங்கிய சட்டீஸ்வர் புஜாரா நிதானமாக விளையாடி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 18-வது சதத்தினை பூர்த்தி செய்தார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது நான்காவது இரட்டை சதத்தினை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் லையோன் தந்திரமாக வீசிய பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து 193 ரன்கள் குவித்த புஜாரா வெளியேறினார். ஏற்கனவே 3 இரட்டை டெஸ்ட் சதங்களை பதிவு செய்திருக்கும் புஜாரா, இன்றைய போட்டியில் தனது 4-வது இரட்டை சத்தினை தவறவிட்டார்.
மறுபக்கம் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் லையோன் பந்துவீசி, கேட்ச் பிடித்து வீரர்களை வெளியேற்றியோர் பட்டியலில் 5-வது இடம் பிடித்துள்ளார். இதுவரை லையோன் 15 கேட்ச் இவ்வாறு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னதாக இப்பட்டியலில் இந்தியாவின் அனில் கும்ப்ளே, இலங்கையில் முரளிதரன் தலா 35 கேட்ச்கள், ஆஸ்திரேலியாவின் வார்னே, நியூசிலாந்து விட்டோரி தலா 21 கேட்ச்கள் பிடித்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.