நா திரும்பி வந்துட்டேனு சொல்லு! ஒருநாள் போட்டியில் 174 ரன்கள் குவித்து புஜாரா சாதனை!
ராயல் லண்டன் கோப்பை ஒரு நாள் போட்டியில் சசெக்ஸ் vs சர்ரே அணிக்காக சேட்டேஷ்வர் புஜாரா 174 ரன்கள் குவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ராயல் லண்டன் கோப்பை ஒரு நாள் சாம்பியன்ஷிப்பில் சர்ரேக்கு எதிராக சசெக்ஸ் 6 விக்கெட்டுக்கு 378 ரன்கள் குவித்தது. இந்தியாவின் டெஸ்ட் போட்டி வீரர் சேதேஷ்வர் புஜாரா 174 ரன்கள் எடுத்தார், மேலும் 48 மணி நேரத்தில் தனது இரண்டாவது சதத்தை எட்டினார். வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில், புஜாரா 79 பந்துகளில் 107 ரன்கள் அடித்து இருந்தார். ஞாயிற்றுக்கிழமை, ஹோவில் உள்ள கவுண்டி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த சசெக்ஸ், டாம் கிளார்க் மற்றும் புஜாரா இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 205 ரன்கள் சேர்த்தனர். முதல் 4 ஓவர்களுக்குள் 9/2 என்று இருந்த நிலையில் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 55 சராசரியைக் கொண்ட புஜாரா, 50 ஓவர் வடிவத்தில் தனது 13வது சதத்தை அடித்தார், மேலும் அவர் 131 பந்துகளை எதிர்கொண்டார். அதில் அவர் 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்தார். 48வது ஓவரில் புஜாரா 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் மாட் டன், கோனார் மெக்கர் மற்றும் ரியான் படேல் ஆகியோரை புஜாரா தலா ஒரு சிக்ஸர் அடித்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் அமர் விர்டி மற்றும் யூசெப் மஜித் ஆகியோரும் சிக்ஸர் அடித்தார்.
மேலும் படிக்க | ’இதற்கு ஒரு முடிவில்லையா?’ ஊர்வசி ரவுடேலாவுக்கு ரிஷப் பன்டின் அடுத்த போஸ்ட்
லீசெஸ்டரில் உள்ள கிரேஸ் ரோடு மைதானத்தில், இடது கை சுழற்பந்து வீச்சாளர் க்ருனால் பாண்டியா மற்றொரு லிஸ்ட் ஏ கேமில் லெய்செஸ்டர்ஷைருக்கு எதிராக 3/69 என்ற புள்ளிகளுடன் வார்விக்ஷயர் அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக உருவெடுத்தார். பாண்டியாவின் துல்லிய பவுலிங்கில் லூயிஸ் கிம்பர் (78), தென்னாப்பிரிக்க சர்வதேச வீரர் வியான் முல்டர் (68), ஆரோன் லில்லி (33) ஆகியோர் பலியாகினர். லீசெஸ்டர்ஷயர் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் மூத்த டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், 10 ஓவர்களில் 2/58 என்ற புள்ளிகளுடன், சாமர்செட் தொடக்க ஆட்டக்காரர்களான ஆண்ட்ரூ உமீத் (10), கேப்டன் ஜேம்ஸ் ரெவ் (114) ஆகியோரின் விக்கெட்டுகளுடன் மிடில்செக்ஸ் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
உமேஷ் தற்போது 4 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகள் மற்றும் 4 விக்கெட்டுகளுடன் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கென்ட் அணியில் நவ்தீப் சைனி விக்கெட் இல்லாமல் வெளியேறினார்.
மேலும் படிக்க | ஐபிஎல் புகார் முதல் புதிய பிஸ்னஸ் வரை: ராஸ் டெய்லரின் அடுத்த இன்னிங்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ