ஆந்திரா துணை கலெக்டராக பி.வி.சிந்து நியமனம்!
![ஆந்திரா துணை கலெக்டராக பி.வி.சிந்து நியமனம்! ஆந்திரா துணை கலெக்டராக பி.வி.சிந்து நியமனம்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/08/10/117654-615709-pv-sindhu-ani.jpg?itok=SVwBSm69)
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்தியாவுக்கு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்று தந்தார். இதனால் இவருக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து பணம், பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மேலும், சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு பி.வி.சிந்துவுக்கு குரூப் 1 பிரிவு அதிகாரி பொறுப்பான துணை ஆட்சியர் பதவி வழங்கி கெளரவித்தது.
இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆந்திர மாநிலம் கொல்லபுடியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று துணை கலெக்டராக பொறுப்பேற்றார்.