ஜாகிர் நாயக்கை நாங்கள் அழைக்கவேயில்லை... பல்டி அடித்த கத்தார்!
கத்தாரில் FIFA உலகக் கோப்பை தொடக்க விழாற்கு ஜாகிர் நாயக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
கத்தார்: 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் முஸ்லீம் மக்கள் தொகை சுமார் 65 சதவீதமாக உள்ளது. அதே சமயம் 15 சதவீத மக்கள் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழா குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து தப்பியோடியதாக அறிவிக்கப்பட்ட ஜாகிர் நாயக் உலகக் கோப்பை தொடக்க விழாவிற்கு அழைக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜாகிர் நாயக்கை கத்தார் வரவேற்றிருந்தால், கால்பந்து தொடர்பான விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் பங்கேற்பது ரத்து செய்யப்படும் என்று இந்திய தரப்பில் இருந்து தெளிவாக கூறப்பட்டது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை கெடுப்பதற்காக மூன்றாவது நாடு பரப்பிய வதந்தி என்று கத்தாரில் இருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவிற்கு ஜாகிர் நாயக்கிற்கு அழைப்பு!
கத்தார் தோஹாவில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையின் தொடக்க விழா நவம்பர் 20 அன்று நடந்தது. இதில் இஸ்லாமிய அடிப்படைவாதி ஜாகிர் நாயக்கும் கலந்து கொண்டார். இந்தியாவில் இருந்து தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்ட ஜாகிர் நாயக்கை கத்தார் அழைத்ததாகக் கூறப்பட்டது. உடனேயே இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கத்தாரை வரவழைத்து ஜாகிர் நாயக்கிற்கு கத்தார் வேண்டுமென்றே அழைப்பு விடுத்திருந்தால், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தங்கர் தனது பயணத்தை ரத்து செய்ய நேரிடும் என்று கூறியது. நவம்பர் 20 அன்று FIFA திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி தங்கர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க | FIFA 2022: கத்தார் கால்பந்து திருவிழாவை சிலர் புறக்கணிப்பது ஏன்? மனித உரிமை மீறல்?
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள மிடில் ஈஸ்ட் மீடியா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பானது, தவா என்ற இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை ஃபிஃபா திறப்பு விழாவிற்கு கத்தார் அழைத்ததாக ஒரு அறிக்கையில் தெரிவித்தபோது இந்த விஷயம் வேகமாக பரிவியது . தவா என்பது ஒரு இஸ்லாமிய நடைமுறையாகும். அதில் முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். மேலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மக்களுக்கு போதிக்கப்படுகிறது.
எனவே, இந்த திறப்பு விழா மூலம் கத்தார் முஸ்லிம் அல்லாதவர்களை மதம் மாற்ற முயலுவதாக கத்தார் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கத்தாரின் அரச குடும்பம் மற்றும் ஜாகிர் நாயக்கின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விழாவின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன, அதில் ஜாகிர் நாயக்கை எளிதாகக் காணலாம்.
தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜாகிர் நாயக்
இந்தியா 2017 ஆம் ஆண்டிலேயே ஜாகிர் நாயக்கை தப்பியோடிய குற்றவாளியாக அறிவித்து, அவர் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பியதாக, ஜாகிர் நாயக் மீது குற்றம் சாட்டப்பட்டதோடு, பணமோசடி குற்றச்சாட்டுகளும் உள்ளன. இதையடுத்து அவரை இந்திய புலனாய்வு அமைப்புகள் தேடி வருகின்றன. தற்போது அவர் மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். கனடா மற்றும் பிரிட்டன் அரசுகள் ஜாகிர் நாயக்கிற்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன.
மேலும் படிக்க | FIFA Worldcup 2022: கத்தாரில் இதையெல்லாம் செய்தால் சிறை தண்டனையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ