ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சரித்திரப் பதிவு செய்தார் ரபேல் நடால்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக டென்னின்ஸ் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் (Rafael Nadal), தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிச்சை (Novak Djokovic) தோற்கடித்து பட்டம் வென்றார்.


இறுதிப் போட்டியில் 7-5, 1-6, 6-3 என்ற செட்களில் Novak Djokovicஐ வீழ்த்தினார் நடால். இந்த ஆண்டு இத்தாலிய ஓபன் 2021 பட்டத்தை வென்ற நடால், தான் எப்போதும் 'களிமண் தரை டென்னிஸ் கள மன்னர்' (King of Clay) என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்தார்.


Also Read | Olympic medalist Sushil Kumarக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீனில்லா வாரண்ட் பிறப்பித்தது


ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் (Italian Open tennis series) ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை ஆட்டக்காரர்   ஜோகோவிச்சும், ஸ்பெயினை சேர்ந்த மூன்றாம் நிலை டென்னிஸ் வீரரான ரபேல் நடாலும் மோதினார்கள். 


முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ரபேல் நடால் கைப்பற்ற, இரண்டாவது செட்டை 6-1 கணக்கில் கைப்பற்றினார் ஜோகோவிச். மூன்றாவது செட்டில் ரபேல் நடால் அதிரடியாக ஆடி 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.  


Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!


மொத்தம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த இறுதி ஆட்டத்தில் 7-5, 1-6, 6-3  என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று 10 முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.


இந்த அற்புதமான வெற்றி மூலம் நடால் ஒரு செய்தியை தெரிவித்திருக்கிறார் என்று விளையாட்டு நிபுணர்கள் கருதுகின்றனர். இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெறவிருக்கும் பிரெஞ்சு ஓபன் பட்டப் போட்டிகளுக்கு முன்னதாக ரஃபேல் நடால் இந்த வெற்றியை பதிவு செய்திருப்பது, அவருக்கு மிகப் பெரிய ஊக்கம் கொடுப்பதாக இருக்கும்.


Also Read | ICC Test தரவரிசையில் இந்தியா முதலிடம், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குதூகலம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR