அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதி சுற்றில் ரஷ்யாவின் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார், ஸ்பெயினின் ரபேல் நடால்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் இறுதி சுற்றில் ரஷ்யாவின் மேத்வதேவ், ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்கொண்டார். பரபரப்பாக சென்ற இப்போட்டியில் இருவரும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.


சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைப்பெற்ற இப்போட்டியில் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் நடால் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் நடால் தனது 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை வென்றுள்ளார்.



33 வயதான ஸ்பானிஷ் இடது கை வீரர், ரோஜர் பெடரரின் அனைத்து நேர ஆண்களின் சாதனையான 20 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளினை தற்போது நெருங்கியுள்ளார்.


இரண்டாம் நிலை வீரரான நடால் இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் $3.85 பரித்தொகையினை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2010, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க கோப்பையை கைப்பற்றியுள்ள நடால் தற்போது தனது நான்காவது அமெரிக்க ஓபன் கோப்பையினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.