துலிப் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டல அணியும், ரகானே தலைமையிலான மேற்கு மண்டல அணியும் மோதின. இப்போட்டியின், மேற்கு மண்டலம் அணி டாஸ் வென்ற முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஹெட் படேலின் 98 ரன்களுடன் அந்த அணி 270 ரன்களை பெற்றது. அதன்பின், விளையாடிய தெற்கு மண்டல அணிக்கு, பாபா இந்திரஜித் சதம் அடிக்க, அந்த அணி 327 ரன்களை பெற்று, 57 ரன்கள் முன்னிலை பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து, தனது இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கு மண்டலம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 265 ரன்களையும், சர்ஃபராஸ் கான் 127 ரன்களையும் குவித்தனர். ஸ்ரேயஸ் ஐயர், ஹெட் படேல், பிரியங்க் பான்ஞல் ஆகியோரும் அதிரடி காட்ட அந்த அணி 585 எடுத்து டிக்ளர் செய்தது. 


மேலும் படிக்க | சர்ச்சையாகும் தீப்தி ஷர்மாவின் 'மன்கட்' ரன் அவுட்!


இதன்மூலம், தெற்கு மண்டல அணிக்கு 529 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து, ஆடிய தெற்கு மண்டல அணி தொடக்க வீரர் ரோஹன் குன்னுமாலை தவிர்த்து மற்ற வீரர்கள் மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, பாபா இந்திரஜித், மனீஷ் பாண்டே, ரிக்கி புய் ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். நிலைத்து நின்று ஆடிவந்த ரோஹன் 93 ரன்களில் அவுட்டாகி தனது சதத்தை தவறவிட்டார். 


இதனால், நேற்றைய (செப். 24) மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், தெற்கு மண்டல அணி 156 ரன்களை மட்டும் எடுத்து ஆறு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதைத் தொடர்ந்து, இன்றைய நான்காம் நாள் (இறுதி நாள்) ஆட்டத்தை தெற்கு மண்டல அணி விளையாடியது. 


சுமார் 31 ஓவர்களுக்கு தாக்குபிடித்த அந்த அணி, 234 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ரவி தேஜா மட்டும் 53 ரன்களை எடுத்து ஆறுதல் அளித்தார். இதன் மூலம், மேற்கு மண்டல அணி 294 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது. ஆட்டநாயகனாக இரட்டை சதம் அடித்த
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வானார். தொடர் நாயகனாக மேற்கு மண்டல அணியின் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் தேர்வானார். 



மேற்கு மண்டல அணி தொடரை வென்றிருந்தாலும், கேப்டன் ரகானே, ஆட்ட நாயகன் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் இன்றைய ஆட்டத்தின்போது, கசப்பான சம்பவம் ஒன்றை சந்திக்க நேர்ந்தது.  இறுதி இன்னிங்ஸின் 50ஆவது ஓவரின்போது, பேட்டிங் செய்து வந்த ரவி தேஜாவும், ஷார்ட் ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்து வந்த ஜெய்ஸ்வாலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக, பீல்டிங் செய்து வந்த மேற்கு மண்டல கேப்டன் ரகானே, இருவரையும் சமாதானம் செய்துவைத்து, தனது அணி வீரர் ஜெய்ஸ்வாலிடம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். 


இருப்பினும், ஜெய்ஸ்வால் மீண்டும் ரவி தேஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ரகானே அவரை களத்தில் இருந்து வெளியேறும்படி கூறினார். தொடர்ந்து, ஜெய்ஸ்வாலும் பெவிலியனை நோக்கி நடையைக்கட்டினார். பெவிலியனுக்கு செல்லும் வழியில் அவர் தனக்குத் தானே ஏதோ சொல்லியபடியே வெளியேறினார். இருப்பினும், சில ஓவர்கள் கழித்து, அதாவது இன்னிங்ஸின் 65ஆவது ஓவரின்போது, அவர் மீண்டும் களத்திற்கு பீல்டிங் செய்ய களமிறங்கினார். 


20 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது, முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் இவர், 23 போட்டிகளில் விளையாடி 547 ரன்களை எடுத்துள்ளார். இடதுகை பேட்டரான இவர், அந்த  அணியின் தொடக்க வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | விடைபெற்றார் ஜூலன் கோஸ்வாமி! இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ