இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே உள்ளார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியோடு அவரது பதவி காலம் முடிவடைகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


இந்திய அணியின் பயிற்சியாளர் ஆவதற்கு உரிய அனைத்து தகுதிகளும் ராகுல் டிராவிட்டிடம் இருக்கிறது. அனைத்து இளம் வீரர்களின் உத்வேகமாக அவர் இருக்கிறார். அவர் மிகவும் கவனமாக செயல்படுவார். பல்வேறு அனுபவங்களை பெற்ற மூத்த வீரர் ஆவார்.


பயிற்சியாளர் பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியது நான் இல்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் தான். யார் பயிற்சியாளர் என்பதை முடிவு செய்யும். அது இந்தியரா? அல்லது வெளிநாட்டவரா? என்பது அவர்களது விருப்பம்.


டிராவிட்டை போன்ற சிறந்தவர் வேறு ஒருவர் இருப்பதாக கிரிக்கெட் வாரியம் கருதும் என்று நினைக்கவில்லை. டிராவிட் பயிற்சியாளர் பதவியை விரும்பினால் அவர் அதில் சிறப்பாக செயல்படுவார்.


கிரிக்கெட்டின் 3 நிலைகளையும் டிராவிட் நன்கு அறிந்தவர். கிரிக்கெட் பற்றிய திறனை அதிகமாக அறிந்தவர். கேப்டனின் விருப்பத்தை பொறுத்த தான் பயிற்சியாளர் தேர்வு இருக்கும்.


இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.