பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் தொடரின் 52 வது லீக்கில் மோதின. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. கடந்த சில போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கி மோசமாக விளையாடிய பேரிஸ்டோவ், இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடினார்.  40 பந்துகளை எதிர்கொண்ட அவர், 56 ரன்களை விளாசினார். அதிரடியாக விளையாடிய பனுக ராஜபக்ச 27 ரன்கள் விளாசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குஜராத் அணிக்கு விளையாடப்போகிறாரா பொல்லார்டு?


இளம் வீரர் ஜிதேஷ் ஷர்மா 18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 38 ரன்கள் எடுத்தார். லிவிங்ஸ்டோன் 22 ரன்கள் விளாசினார். இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர். ஜெய்ஸ்வால் 68 ரன்களும், பட்லர் 30 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த வீரர்களும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த, ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். 



இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை அந்த அணி 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பெற்றுள்ளது.  11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பெற்ற பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இன்னும் 2 வெற்றிகளைப் பெற்றால் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றை எட்டிவிடும்.



அதேநேரத்தில் பஞ்சாப் அணி இனி வரும் ஆட்டங்களில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும். ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இந்த தொடரில் மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ராஜஸ்தான் பவுலர் என்ற சிறப்பையும் பெற்றார்.


மேலும் படிக்க | சச்சினுக்கு எதிராக டிராவிட் செய்த சதி - யுவராஜ் சிங் ஓபன் டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR