IPL2022: ஐபிஎல் அணிக்காக தலைமுடி நிறத்தை மாற்றிய கிரிக்கெட் வீரர்
ஐபிஎல் அணிக்காக தலைமுடி நிறத்தை மாற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரரின் புகைப்படம் வைரலாகியுள்ளது
ஐபிஎல் 2022 திருவிழா களைகட்டுவதற்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இதனால், கடந்த மாதம் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சம்பந்தப்பட்ட அணியுடன் இணைந்து வருகின்றனர். கேப்டன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஏற்கனவே சூரத்தில் பயிற்சியை மும்முரமாக மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டன் மற்றும் டிஜே பிராவோ ஆகியோரும் நேற்று அணியுடன் இணைந்தனர்.
மேலும் படிக்க | "ஐபிஎல் திருவிழா 2022" - புதிய மாற்றமும் புதிய வியூகமும்..!
இதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடிதுள்ள வெளிநாட்டு வீரர்களும், அந்த அணியுடன் இணைந்து வருகின்றனர். லேட்டஸ்டாக ஷிம்ரோன் ஹெட்மயர் ராயல்ஸூடன் இணைந்துள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய ஷிம்ரோன் ஹெட்மயர் இந்தமுறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அதிரடி ஆட்டக்காரரான அவரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக 8.5 கோடிக்கு ராயல்ஸ் அவரை தன்வசப்படுத்தியது.
ராஜஸ்தான் அணியின் பயோ பபிளில் ஹெட்மயர் இணைந்திருக்கும் நிலையில், அவருடைய லுக் இணையத்தை கலக்கத் தொடங்கியிருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியபோது நீல நிறத்தில் முடியை கலரிங் செய்திருந்த அவர், தற்போது தனது லுக்கை பிங் நிறத்துக்கு மாற்றியுள்ளார். ராஜஸ்தான் அணியின் ஜெர்சி நிறம் பிங்க் என்பதால், அதற்கேற்ப ஹெட்மயர் தலைமுடியை ஹேர்கலரிங் செய்திருப்பது, நெட்டிசன்களை வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த ஐபிஎல் போட்டியில் 14 போட்டிகளில் 242 ரன்கள் எடுத்திருந்தார் ஹெட்மயர். 168 ஸ்டைக் ரேட் வைத்திருந்தார். இறுதிக் கட்டத்தில் களமிறங்கி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை இருப்பதால், ராஜஸ்தான் அணி ஹெட்மயரை ஏலத்தில் எடுத்துள்ளது. மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொள்ள உள்ளது.
மேலும் படிக்க | ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது DC: என்ன ஸ்பெஷல்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR