இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இடைகால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து துஷார் அரோத் விலகியை அடுத்து மகளிர் அணியின் இடைக்கால பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணிக்கான புதிய பயிற்சியாளரை BCCI தேர்ந்தொடுக்கும் வரை ரமேஷ் பவார் பதவியில் வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரும் ஜூலை 25 முதல் மகளிர் அணிக்கான பயிற்சியாளராக, பெங்களூரு முகாமில் இருந்து பவார் தன் பணியை துவங்கவுள்ளார். முழு நேர பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக BCCI ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாள் எனவும் அறிவித்துள்ளது.


மகளிர் அணிக்கு பயிற்சி அளிக்கும் பெறுப்பினை எனக்கு கொடுத்தமைக்கு நான் பெருமை படுகின்றேன். என் பொறுப்பில் இருந்து சிறப்பாக செயல்படுவேன் எனவும் ரமேஷ் பவார் தெரிவித்துள்ளார்.


40 வயதாகும் ரமேஷ் பவார் இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 டேஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். மேலும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். எனினும் இவரது முதல் தர போட்டிகளில் இவர் 148 போட்டிகளில் விளையாடி 470 விக்கெட்டுகளை குவித்துள்ளார். இந்த செயல்பாடே இவரை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்க காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.