இந்திய அணியின் கோச் ஆக ரவிசாஸ்திரிக்கு அதிக வாய்ப்பு- சுனில் கவாஸ்கர்
இந்தியாவின் தலைமை கோச் பதவிக்கு வீரேந்திர ஷேவாக், லால்சந்த் ராஜ்புட், தோடா கணேஷ், வெங்கடேஷ் பிரசாத், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, பாகிஸ்தான் முன்னாள் கோச் ரிச்சர்டு பைபஸ், மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் கோச் ஃபில் சைமன்ஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தலைமை கோச் பதவிக்கு கோலியின் ஆதரவாளரான ரவி சாஸ்திரியும் விண்ணப்பித்துள்ளார்.
இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று கிரிக்கெட் வழிக்காட்டு குழுவின் உறுப்பினர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
தலைமை கோச் தேர்வு குறித்து சுனில் கவாஸ்கர் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது:-
தலைமை கோச் பணிக்கு பிசிசிஐயின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி முறையாக விண்ணப்பித்துள்ளார். தற்போது அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ள 7 பேரில் ரவி சாஸ்திரி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது என்றார்.