புதுடெல்லி: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பத் தயாராக உள்ளார். ஜடேஜா நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும், அதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் 6 வாரங்கள் அணியில் இருந்து வெளியேறினார். இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஜடேஜா பங்கேற்கவில்லை. IPL 2021  மூலம் ஜடேஜா மிண்டும் கிரிக்கெட்டிற்குத் திரும்பினார். IPL-ல் நடந்த அனைத்து போட்டிகளிலும் அவர் CSK-க்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு முழுமையாக தயாராக உள்ளார்.


ஜடேஜா தன் தோற்றத்தை மாற்றியுள்ளார்
மே 24 முதல், ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 8 நாள் தனிமைப்படுத்தலில் இருப்பார். அதன் பிறகு ஜூன் 2 ஆம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள அவர் புறப்படுவார். இதன் பின்னர், ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடுவார். அத்தகைய சூழ்நிலையில், இந்த சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பு ஜடேஜா தனது ஸ்டைலை மாற்றியுள்ளார்.



ரவீந்திர ஜடேஜா தனது புதிய தோற்றத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த ஸ்டைலை ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள். சமூக வலைதளங்களில் அவரது புதிய லுக்கின் புகைப்படம் வைரலாகி வருகிறது.


ALSO READ: MS Dhoni-யின் மறைந்த முன்னாள் காதலியின் போட்டோ வைரல்: அவர் இறந்தது எப்படி?


ஐ.பி.எல்லில் அசத்தினார் ஜடேஜா


ரவீந்திர ஜடேஜா IPL 2021 சீசனின் 7 போட்டிகளில் 131 ரன்களை எடுத்தார். இதில் 1 அரைசதமும் அடங்கும். இது தவிர, ஜடேஜா 7 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும், ஜடேஜா மொத்தம் 8 கேட்சுகளை பிடித்தார். ஒரு போட்டியில், அவர் 4 கேட்சுகளை பிடித்தார். 


ஜூன் 18 அன்று சவுத்தாம்ப்டனில் WTC இறுதிப்போட்டி


BCCI-யின் தேர்வாளர்கள் குழு, அபிமன்யு ஈஸ்வரன், ப்ரசித்த கிருஷ்ணா, அவேஷ் கான், அர்ஜன் நாக்வாஸ்வாலா ஆகியோரை அணியில் காத்திருப்பு வீர்ரகளாக வைத்துள்ளது. அபெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள கே.எல். ராகுல் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விருத்திமான் சஹா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது ஜடேஜா மற்றும் விஹாரி ஆகியோர் காயமடைந்தனர். நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 அன்று சவுத்தாம்ப்டனில் நடைபெறும். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கும்.


இந்திய அணியின் விவரங்கள் பின்வருமாறு:


ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயாங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷார்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், (ஃபிட்னஸ் சான்றிதழ் கிடைத்தால்), வ்ரித்திமன் சாஹா (ஃபிட்னஸ் சான்றிதழ் கிடைத்தால்).


ALSO READ: மீண்டும் நடக்கிறதா IPL 2021? மீதமுள்ள போட்டிகளை இங்கு நடத்த BCCI முயற்சி!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR