ஜடேஜா முதலிடம்! உலகின் நெம்பர் 1 ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா!
ICC ஆடவர் டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்திற்கு திரும்பினார். சக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டரை பின்னுக்குத் தள்ளினார்.
மொஹாலி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தனது திறமையை நிரூபித்த ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 ஆல்ரவுண்டராக முன்னேறியுள்ளார்.
மொஹாலி டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தார், பின்னர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பிப்ரவரி 2021 முதல் முதலிடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜடேஜா முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 175* ரன்கள் எடுத்தார். இந்தியா 574/8 டிக்ளேர் செய்ய உதவியது. அதைத் தொடர்ந்து அவர் இலங்கையின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸிலும் 4/46 என்ற கணக்கில் விக்கெட்டை கைப்பற்றினார்.
மேலும் படிக்க: இந்திய அணியை வெற்றிபெற வைக்கப்போகும் அந்த 3 பேர்.! ரோகித் - விராட் இல்லை
ரவீந்திர ஜடேஜா இதற்கு முன்பு ஆகஸ்ட் 2017 இல் ஒரு வாரத்திற்கு ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தார்.
இதற்கிடையில், மொஹாலி டெஸ்டில் நல்ல பர்பாமன்ஸ்வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஷ்வின், ஹோல்டருக்குப் பின்னால் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அஸ்வினும் ஜடேஜாவும் இணைந்து 130 ரன்கள் சேர்த்தனர். இது இந்தியாவின் சிறந்த பார்ட்னர்ஷிப் இன்னிங்ஸ் ஆக இருந்தது.
ஆன்டிகுவாவில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கிய ஹோல்டர், ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்திய அணி வீரர் விராட் கோலியும் சமீபத்திய தரவரிசையில் முன்னேறியுள்ளார். முன்னாள் கேப்டன் விராட் ஆண்கள் பேட்டிங் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
மேலும் இலங்கைக்கு எதிராக ரிஷப் பண்ட் 96 ரன்களை குவித்ததால், அவர் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறினார்.
மேலும் படிக்க: அன்று சச்சின், இன்று ஜடேஜா! இந்திய அணியில் தொடரும் சர்ச்சை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR