Asia Cup 2022: சண்டைக்கு பின் சந்திப்பு; மஞ்ச்ரேக்கர் கேள்வி - ஜடேஜாவின் ரிப்ளை
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு என்னுடன் பேசுவதற்கு தயாரா? என மஞ்ச்ரேக்கர் கேட்க, அதற்கு ஜடேஜா கொடுத்த ரியாக்ஷன் இதுதான்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டி எதிர்பார்த்தது போலவே பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இரு அணிகளும் களத்தில் நேருக்கு நேர் சந்திப்பதால் உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர். அதற்கு ஏற்றார்போல் பரபரப்பு பஞ்சமில்லாமல் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றியை பெற்றது.
பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு பாகிஸ்தான் அணி விளையாடவில்லை என்றாலும், பந்துவீச்சில் புயல்வேக தாக்குதல்களை தொடுத்து இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளித்தனர். அந்த அணியின் அறிமுக பந்துவீச்சாளர் நசீம், ஸ்டாராக ஜொலித்தார். மற்ற வீரர்களும் கட்டுக்கோப்பாக பந்துவீச, போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. இந்திய அணியில் விராட் கோலி தொடக்கத்தில் பொறுமையாக விளையாடி அடித்தளம் அமைக்க, ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் ஜடேஜா அவுட்டானாலும், தனக்கே உரிய ஸ்டைலில் சிக்சர் அடித்து மேட்ச்சை முடித்தார் பாண்டியா.
மேலும் படிக்க | IND vs PAK: தேசிய கொடியை வாங்க மறுக்கும் ஜெய் ஷா! வைரலாகும் வீடியோ!
அதன்பிறகு மேட்ச் போஸ்ட் பிரசன்டேஷன் நிகழ்வு நடைபெற்றது. இதில் மஞ்ச்ரேக்கர் தொகுப்பாளராக இருக்க, ஜடேஜா பேச வந்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டது, சமூக வலைதளங்களில் கடுமையாக மோதிக் கொண்டனர். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு ஜடேஜாவின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்தார் மஞ்ச்ரேக்கர். இதற்கு பதிலடி கொடுத்த ஜடேஜா, "நீங்கள் விளையாடிய போட்டிகளை விட நான் இரண்டு மடங்கு போட்டிகளில் விளையாடியுள்ளேன். சாதித்தவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்" என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இன்னும் சில கடுஞ்சொற்களை பயன்படுத்தி மஞ்ச்ரேக்கரை விமர்சித்தார் ஜடேஜா.
அதன்பிறகு இருவரும் நேருக்கு நேர் நேற்றைய போட்டிக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர். அப்போது பேச வந்த ஜடேஜாவிடம், முதலில் நீங்கள் என்னுடன் பேசுவதற்கு தயாரா? என்று மஞ்ச்ரேக்கர் கேள்வி எழுப்ப, ஜடேஜா "எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை நீங்கள் கேட்கலாம்" எனத் தெரிவித்தார். அதன்பிறகு போட்டியைப் பற்றி பேசிய ஜடேஜா, "ஹர்திக் பாண்டியாவும் நானும் இறுதி வரை விளையாட விரும்பினோம். பாகிஸ்தான் மிகச் சிறந்த பந்துவீச்சைக் கொண்டிருந்தனர். அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக வீசி நெருக்கடி கொடுத்தனர். நான் ஆட்டத்தை முடித்திருக்கலாம். ஆனால் ஹர்திக் சிறப்பாக விளையாடினார். அவர் கடைசி வரை இருந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனக் கூறினார்.
இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார், நான்கு ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 2 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது. அடுத்ததாக ஹாங்காங்கை எதிர்த்து வரும் புதன்கிழமை இந்திய அணி விளையாட இருக்கிறது.
மேலும் படிக்க | IND vs PAK: ’அந்த தவறு இந்த முறை நடக்காது’ இந்தியாவின் ’கேம்’ பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ