சாஹல் வேண்டும், சிராஜ் வேண்டாம் - ஆர்சிபி எடுத்த அதிரடி முடிவு
RCB, IPL 2025 Auction, Siraj | யுஸ்வேந்திர சாஹலை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்த ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு அணி, முகமது சிராஜை எடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏன் தெரியுமா?
RCB, Siraj | ஐபிஎல் 2025 ஏலத்தில் யுஸ்வேந்திர சாஹலை மீண்டும் அணிக்குள் கொண்டுவர முயற்சி செய்த ஆர்சிபி அணி, முகமது சிராஜ் ஏலத்துக்கு வந்தபோது கண்டுகொளவே இல்லை. அவர் போனால் போகட்டும் என அமைதியாகவே இருந்தனர். ஆர்சிபி அணியின் இந்த முடிவு ஆச்சரியமாக இருந்தது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 12.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. சாஹலுக்கு காட்டிய ஆர்வம், முகமது சிராஜூக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏன் காட்டவில்லை என்பதற்கான காரணங்கள் இருக்கிறது.
குஜராத் அணியில் முகமது சிராஜ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்த முகமது சிராஜ் இப்போது குஜராத் அணிக்கு சென்றுள்ளார். அவரை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுக்காமல் விட்டது ஆச்சரியமான முடிவு. ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அவர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆர்சிபி அணி சிராஜை ஏலத்தில் எடுக்காமல் விட்டதற்கான சில காரணங்கள் இருக்கின்றன. அவர் கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்சிபி அணியில் தான் இருக்கிறார். சிராஜ் பவுலிங் முக்கியமான போட்டிகளில் சரியாக இல்லை என்ற அதிருப்தி அந்த அணி நிர்வாகத்துக்கு இருந்தது.
விராட் கோலி ஆதரவு
இருப்பினும் சிராஜ் அந்த அணியில் விராட் கோலி ஆதரவுடன் இருந்தார். இந்த முறை விராட் கோலியை மட்டும் தக்க வைத்திருக்கும் அந்த அணி, வீரர்கள் தேர்வில் தலையிட வேண்டாம் என அவரிடம் கேட்டுக் கொண்டது. இதன்படி, விராட்கோலி ஆர்சிபி அணி பிளேயர்கள் ஏலம் குறித்து எந்த ஆலோசனையும் கொடுக்கவில்லை. அந்தவகையில் சிராஜூக்கு இம்முறை விராட் கோலி ஆதவு இல்லாமல் போய்விட்டது. அதனால் அவர் இப்போது குஜராத் அணிக்கு செல்ல வேண்டியாகிவிட்டது. ஆர்டிஎம் இருந்து ஆர்சிபி அணி பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யுஸ்வேந்திர சாஹல் மீது விருப்பம்
அதேநேரத்தில் ஏலத்தில் ஆர்சிபி அணி யுஸ்வேந்திர சாஹலை ஏலம் எடுக்க போட்டி போட்டது. ஏனென்றால் சாஹல் ஆர்சிபி அணியில் தான் சில வருடங்களாக விளையாடிக் கொண்டிருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் சுழற்பந்துவீச்சாளராக அவர் இருந்தபோதும் கடந்த ஏலத்தில் சாஹலை அணியில் தக்க வைக்கவில்லை. இதுகுறித்து பேட்டி ஒன்றில்கூட சாஹல் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் முடிந்தளவுக்கு அவரை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டது. இருப்பினும் பஞ்சாப் அணி 18 கோடி ரூபாய் கொடுத்து சாஹலை ஏலத்தில் எடுத்தது.
மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ரிஷப் பந்த்! எத்தனை கோடி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ