ராயலாக விளையாடி வெற்றி பெற்ற ஆர்சிபி!
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ராயல் சேலஞ்ச் பெங்களூர்.
ஐபி எல் 2021ல் 48வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பஞ்சாப் அணிக்கு பிளே ஆஃப் கனவு பலிக்கும் என்பதால் இன்றைய போட்டி சற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆர்சிபி அணியின் துவக்கம் சிறப்பாகவே அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். ஹென்ரிக்சின் சிறப்பான பந்துவீச்சில் கோலி, படிக்கல், கிறிஸ்டியன் அடுத்தடுத்து வெளியேறினர். பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 57 ரன்கள் அடித்தார். பின் களம் இறங்கிய டிவில்லியர்ஸ்ம் தன் பங்கிற்கு 2 சிக்ஸர்கள் அடித்தார். கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசிய சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் சமி மற்றும் ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் கேஎல் ராகுல் 39 ரன்களுக்கு வெளியேறினார். சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 42 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் ரன்கள் அடிக்க தவறினர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடித்தது.
இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
ALSO READ T20 World Cup இல் வைல்ட் கார்டு என்ட்ரி; ருதுராஜ் கெய்க்வாட்க்கு அதிக வாய்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR