நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து வெளியேறிய ஷிகர் தவான்
நியூசிலாந்தில் நடைபெறும் டி 20 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பங்கேற்க முடியாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
புது டெல்லி: நியூசிலாந்தில் நடைபெறும் டி 20 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பங்கேற்க முடியாது. தோள்பட்டை காயம் காரணமாக அவர் இந்திய அணிக்காக விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதாவது திங்களன்று நியூசிலாந்து சென்ற இந்திய வீரர்களுடன் ஷிகர் தவான் செல்லவில்லை என்று செய்திகளில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும், இது தொடர்பாக பி.சி.சி.ஐ (BCCI) இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காயம் ஏற்பட்டதிலிருந்து தவான் நியூசிலாந்து செல்வது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. தவானுக்கு மாற்றாக எந்த வீரர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்தார்:
ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பீல்டிங்கின் போது ஷிகர் தவான் தோள்பட்டை காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தவான் ஒரு எக்ஸ்ரேக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து திரும்பிய பின், அவரது இடது கையில் கட்டு கட்டப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதன் பிறகு அவர் நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கு செல்வாரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது.
தொடர் ஜனவரி 24 ஆம் தேதி தொடங்குகிறது:
இந்திய அணிக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் ஜனவரி 24 ஆம் தேதி தொடங்குகிறது. இதன் பின்னர், இரு அணிகளுக்கும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன. இதன் பின்னர், இரண்டு டெஸ்ட் தொடர்கள் பிப்ரவரி 21 முதல் தொடங்கும். டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு ஒரு பயிற்சி போட்டியில் இந்திய அணியும் பங்கேற்கிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.