இன்று நடைபெற உள்ள இந்திய - நியூஸிலாந்து அணிகள் மோதும் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.  இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதால் இரண்டு அணிகளுமே கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்றைய போட்டியில் நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பரோ (richard kettleborough) நியமிக்கப்பட்டுள்ளதை கண்டு இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை திணறடிக்க தயாராகும் ட்ரெண்ட் போல்ட்!


ரிச்சர்ட் கெட்டில்பரோ (richard kettleborough) நடுவராக இருந்த போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியதே இதற்க்கு காரணமாக கருதப்படுகிறது.  இந்திய அணி எதிர்கொள்ளும் முக்கியமான ஐசிசி போட்டிகளில் அனைத்திலும் இவர் நடுராக இருந்து இருக்கிறார்.   2014ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை பைனல் போட்டி, 2015 உலக கோப்பை அரைஇறுதி போட்டி, 2016 டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி, 2017 சாம்பியன்ஸ் ட்ரோபி இறுதி போட்டி, 2019 உலக கோப்பை அரைஇறுதி போட்டி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டி (3வது நடுவர்) என இந்திய அணி தோல்வி பெற்ற அனைத்து போட்டிகளிலும் இவரே நடுவராக இருந்துள்ளார்.  குறிப்பாக 2019ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனி ரன் அவுட் ஆனா பிறகு இவர் குடுத்த ரியாக்சன் இன்று வரை மீம் மெட்டீரியாலாக இருக்கிறது.  



இவருக்கும் இந்திய அணி ஆடும் போட்டிகளுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கையில் இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்திலும் ரிச்சர்ட் கெட்டில்பரோ (richard kettleborough) நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.  இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.  


 



ALSO READ வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR