ஆஸ்திரேலிய கிரக்கெட் அணி, அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. இந்த தொடர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான தொடர். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால், இந்த தொடரில் வெற்றி பெற்று புள்ளிகளை சேர்க்க வேண்டிய நெருக்கடி இரு அணிகளுக்கும் இருக்கிறது. தற்போதைய சூழலில் இந்திய அணி டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த அணியை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா தயாராக வேண்டும் என எச்சரித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இப்படி ஒரு ரெக்கார்டா? உலக சாதனை படைத்த இந்திய அணி!


ஐசிசிக்கு அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஃபார்ம்முக்கு வர வேண்டும். அவரின் ஃபார்ம் அவுட், அணியை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. ஸ்மித் மீண்டும் ஃபார்முக்கு திரும்பும்பட்சத்தில் ஆஸ்திரேலியா வலுவான அணியாக மாறும். ஓர் ஆண்டில் ஐந்து ஆறு சதங்கள் அவர் அடித்திருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தகைய ஆட்டத்தை அவரிடம் பார்க்க முடியவில்லை.


அவரின் ஆட்டத்தின் பெரிய மாற்றம் ஏதும் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான ஆட்ட நுணுக்கம் இருக்கிறது. பெரிய வொர்க் அவுட் ஏதும் செய்ய தேவையில்லை என்றே நினைக்கிறேன். எதிரணியினர் அவரை அவுட் செய்ய எடுக்கும் ஆக்ரோஷமான அணுகுமுறை, அவர்களுக்கு கை கொடுப்பதாக நினைக்கிறேன். அந்த வழியில் ஸ்மித் விரைவில் ஆட்டம் இழப்பதால், அதில் கவனம் செலுத்தினால் பழைய பேட்டிங் ஃபார்ம் ஸ்டீவ் ஸிமித்திடம் எதிர்பார்க்கலாம். ஆஸ்திரேலிய அணியும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படும்" எனத் தெரிவித்துள்ளார். 


இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. முதலில் 20 ஓவர் போட்டியும், பின்னர் டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஸ்மித் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | வாஷிங்டன் சுந்தர் வீசிய மேஜிக் பால் - திகைத்துப்போன பேட்ஸ்மேன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ