ஐபில் போட்டியின் லீக் மேட்சுகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், உட்சக்கட்ட பரபரப்பு காட்சிகளும் அரங்கேறி வருகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கான இடத்தை குஜராத் அணி உறுதி செய்துவிட்ட நிலையில் மற்ற 3 இடங்களுக்கு கடும் போட்டிநிலவுகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | RIP Symonds: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நினைவஞ்சலி


வெற்றி பெற்ற கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது. இப்போட்டியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணியில் களமிறங்கிய ரிங்கு சிங், 12வது ஓவரில் தமிழக வீரர் நடராஜன் வீசிய யார்க்கர் பந்துவீச்சில் அவுட்டானார். எல்பிடபள்யூ-க்கு நடராஜன் அப்பீல் செய்தபோது, சற்று யோசித்த கள நடுவர் திடீரென அவுட் என விரலை உயர்த்தினார். இதற்கு அதிருப்தியை வெளிபடுத்தியவாறு களத்தில் நின்று கொண்டிருந்த ரிங்கு சிங், டிஆர்எஸ்-க்கு குறிப்பிட்ட 15 நொடிகளுக்கு ஆப்பீல் செய்யவில்லை. 



எதிர் முனையில் நின்று கொண்டிருந்த சாம்பில்லிங்ஸூடன் அவுட் குறித்து பேசிக் கொண்டே இருந்த அவர், டைம் முடித்த பிறகு டிஆர்ஆஎஸூக்கு  அப்பீல் செய்தார். ஆனால் அவரின் அப்பீலை நடுவர்கள் ஏற்க மறுத்தனர். குறிப்பிட்ட நொடிகளுக்குள் அப்பீல் செய்யாததால் களத்தை விட்டு வெளியேறுமாறு கூறிவிட்டனர். இருப்பினும் பிடிவாதமாக களத்தில் நின்று கொண்டிருந்த ரிங்கு சிங், அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார். 


ஒரு கட்டத்தில் எதிரணி கேப்டன் வில்லியம்சனும் டென்ஷனாக வந்து பேசத் தொடங்கினார். இது மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவுட் இல்லை என்றால் கூட அம்பயர் அவுட் கொடுத்துவிட்டால் களத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் அல்லது டிஆர்எஸ் அப்பீல் செய்ய வேண்டும். இரண்டும் செய்யாமல் ரிங்கு சிங் களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


மேலும் படிக்க |  ஐபிஎல் மேட்ச் பிக்சிங் செய்ததாக மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR