ரியோ ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் கோலாகலமாக இன்று தொடங்கியது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழா(31-வது) பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்கள் நடைபெறுகிறது.


தொடக்க விழா பிரபலமான கால்பந்து மைதானமான மரகானாவில் அந்த நாட்டு நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு தொடங்குகியது. தென் அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெற்றது.


மரகானா கால்பந்து மைதானத்தில் நடைப்பெற்ற தொடக்க விழாவில் ஐ.நா.,பொது செயலாளர் பான்கி மூன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினர் நீடா அம்பானி கலந்து கொண்டார். மேலும் இந்திய அணிக்காக அபினவ் பிந்த்ரா இந்திய தேசிய கொடியை ஏந்தி வந்தார்.


தொடக்க விழாவில் சுமார் 5 ஆயிரம் நடன கலைஞர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இவை பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகை யில் இருந்தது. தொடக்க விழாவின் இறுதியாக இரவைப் பகலாக்கும் வாணவேடிக்கைகள் ரியோ டி ஜெனிரோவை அதிரவைத்தது.


இந்தியாவின் சார்பாக ரியோ ஒலிம்பிக்கில் 118 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.