பிபா உலகக்கோப்பை 2022 தொடர் கடந்த நவ. 20ஆம் தேதி கத்தாரில் நடைபெற்று வருகிறது. கால்பந்து  உலகக்கோப்பை என்றாலே சர்ச்சையும், கொண்டாட்டமும் அதனை சுற்றிக்கொண்ட இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீரர்களுக்குள் நடக்கும் மோதல், அணிகளின் வித்தியாசமான வெற்றி கொண்டாட்டங்கள், மைதானத்தில் ரசிகர்களின் வினோதமான செயல்கள், வீரர்களின் நடத்தைகள் என தொடர்ந்து பல விவகாரங்கள் வெடித்துக்கொண்டே இருக்கும். இந்நிலையில், கால்பந்து உலகக்கோப்பையில் தங்கள் நாட்டு அணி தோல்வியடைந்ததைபொறுக்காமல், சிலர் கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நடப்பு உலகக்கோப்பை தொடரில், ஐரோப்பிய அணியான பெல்ஜியம், ஆப்பிரிக்காவின் மொராக்கோ அணியுடன் நேற்று மோதியதில், இதில், பெல்ஜியம் 0 - 2 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. இதுதான், பெல்ஜியம் தலைநகர் ப்ரூசெல்ஸ் நகரில் நேற்றிரவு ஏற்பட்ட கலவரத்திற்கு தூண்டுகோளாக இருந்துள்ளது.


மேலும் படிக்க |  FIFA World Cup : செக்ஸ் குற்றச்சாட்டுகள்... கால்பந்து உலகையே உலுக்கிய 5 சம்பவங்கள்!


பிரஸ்ஸல்ஸ் நகரில் சில கார்கள், எலெக்ட்ரிக் பைக்குகள் உள்ளிட்ட சாதனங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. இந்த
கலவரத்தில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்துவைத்துள்ளனர், ஒருவரை கைது செய்துள்ளனர். 


பல இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன. அங்கு பத்திற்கும் மேற்பட்ட கால்பந்து ரசிகர்கள், மொராக்கோ கொடிகளை வைத்திருந்த சிலர், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியிட்டுள்ளனர். அவர்களை கண்ணீர் வெடிகுண்டுகள் வீசியும், தண்ணீர் பாய்ச்சியும் போலீசார் தடுத்துள்ளனர். இதையடுத்து, இரவு 7 மணியளவில் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும், கலவரம் ஏற்பட்ட இடங்கள் தங்களின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் போலீசாரின் செய்திதொடர்பாளர் தெரிவித்தார். 


கலவரக்காரர்கள் குச்சிகள், தீப்பந்தம் ஆகியவற்றின் மூலம் கலவரத்தில் ஈடுபட்டு தீவைப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டதாக தகவல் தெரவிக்கப்பட்டது. கலவரத்தில் சில பத்திரிகையாளர்களும் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 


நடப்பு பிபா உலகக்கோப்பை தொடரில் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் அணியில், தனது முதல் போட்டியில் கனடா அணியை வீழ்த்தியிருந்தது. தொடர்ந்து, நேற்றைய தோல்வி மூலம் அந்த அணி, எஃப் பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. குரேஷியா முதலிடத்திலும், மொராக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. 


இதனால், பெல்ஜியம் கடைசி போட்டியில் பலம்வாய்ந்த குரேஷியாவுடன் மோதி வென்றால்தான் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிபா உலகக்கோப்பையில் நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின் - ஜெர்மனி போட்டி நேற்று நடைபெற்றது. அதில், இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து போட்டியை டிராவாக்கியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | அவருக்கு ஓய்வு கொடுங்கள்! நட்சத்திர வீரருக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ